The News Sponsor By
feature-top
feature-top

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 5,609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2 இலட்சத்து 63 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5,577 பேர் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 32 பேர் அடங்குவதாகவும் சுகாதார துறை அறிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,021 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா தொற்றினால் 109 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.

அதேசமயம் இன்று மட்டும் 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு இதுவரை மொத்தம் 2,02,283 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This News
feature-top
feature-top