The News Sponsor By
feature-top
feature-top

காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டங்களை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல திசைத் திருப்புவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் பெயர் மாற்றங்கள் செய்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  தெரிவித்திருப்பது, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்களைத் திசைத் திருப்புவதற்காகவே எனவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் அமைச்சர் கெஹலிய அமைச்சராக இருந்தார். இறுதி யுத்தத்தின்போது என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியும். 

படையினரிடம் கையளித்தவர்கள், வௌ்ளை வானில் கடத்தப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளையுமே நாங்கள் தேடுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This News
feature-top
feature-top