The News Sponsor By
feature-top
feature-top

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நவரசா’ என்ற வெப் தொடரில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் அடுத்ததாக ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்து வருகிறார்.

9 தொடர்கள் கொண்ட இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், சித்தார்த், அரவிந்த்சாமி உட்பட 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர்.

இந்த வெப் தொடரின் மூலம் நடிகர்கள் சித்தார்த், அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.

சூர்யா, விஜய் சேதுபது, பார்வதி, சினேகா, ஜெய் ஆகியோர் இந்த வெப் தொடரில் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்நிலையில், இந்த வெப் தொடரில் இயக்குனர் கௌதம் மேனனும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கவுதம் மேனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Share This News
feature-top
feature-top