The News Sponsor By
feature-top
feature-top

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெலிவத்தையில் உள்ள தேயிலை மலையில் இன்று உயிரிழந்த நிலையில் மீன்பிடி பூனையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பத்தனை பொலிஸார் இதனை தெரிவித்தனர். பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த மீன்பிடி பூனையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மீன்பிடிப் பூனை விஷ உணவு உட்கொண்டு உயிரிழந்துள்ளதா? அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் உடலில் இரண்டு காயங்கள் காணப்பட்டது. இது மனிதர்களுக்கு தீங்கு செய்யும் விலங்கு அல்ல என வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைப் பாதுகாப்பது தொடர்பில் தெளிவூட்டல்கள் அவசியம் என மக்கள் தெரிவித்தனர். குறித்த மீன்பிடிப் பூனையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

Share This News
feature-top
feature-top