Published:Category:

கலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்!

#MIvDC

கலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆயத்தின் விசாரணைகள் நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றி மோதலாகியிருந்தது. 

அன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

எனினும், உடனடியாகவே மாணவர்கள் மத்தியில் பேசிய துணைவேந்தர், தான் உட்பட அனைவரையும் விசாரணை செய்யும் வகையில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்குச் சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அன்றிரவு கலைந்து சென்றிருந்தனர்.

மறுநாள், 9 ஆம் திகதி கூடிய பல்கலைக்கழகப் பேரவை, வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் மா. நடராஜசுந்தரத்தை விசாரணையாளராகக் கொண்டு தனிநபர் விசாரணை ஆயம் ஒன்றினை நியமித்திருந்தது.

இதனிடையே, பல்கலைக்கழகத்துக்கும், அதன் துணைவேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட - மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து கலைப்பீட விரிவுரையாளர்கள் அனைவரும் விரிவுரைகளைப் புறக்கணிக்கப் போவதாக கலைப்பீடச் சபை ஏகமனதாக முடிவு செய்து அறிவித்தது.

இதனை அடுத்து, மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் என நிர்வாகத்தினால் இனங்காணப்பட்ட 21 மாணவர்கள் வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் கடந்த 12 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் கலைப்பீட விரிவுரைகள் வழமைக்குத் திரும்பின.

விசாரணைக்கென நியமிக்கப்பட்ட பேராசிரியர் மா. நடராஜ சுந்தரம் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்பட்டிருந்ததனால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டிருந்தது. 

எனினும் நாளை முதல் விசாரணைகள் முழு வீச்சில் இடம்பெறும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதற் கட்டமாக சம்பவ தினத்தன்று, தாக்குதலுக்கு உள்ளாகிய விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட அதிகாரிகளும் நாளை சாட்சியமளிக்கவுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

#MIvDC

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

Published:Category:

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

#MIvDC

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

Published:Category:

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

#MIvDC

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

Published:Category:

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

#MIvDC

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

Published:Category:

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

#MIvDC

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

Published:Category:

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

#MIvDC

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

Published:Category:

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#MIvDC

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Published:Category:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

#MIvDC

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published:Category:

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

#MIvDC

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

Published:Category:

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

#MIvDC

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder