Published:Category:

மரத்தில் கார் மோதியதில் பெண் பார்க்க சென்ற மாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி!

#MIvDC

மரத்தில் கார் மோதியதில் பெண் பார்க்க சென்ற மாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் செம்மடைப்பட்டி என்ற ஊரில் இருந்து பெண் பார்ப்பதற்காக  பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்கு காரில் 5 பேர் வந்து கொண்டிருந்த நிலையில் கரடிக்கூட்டம் என்ற ஊரின் அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் வேப்ப மரத்தில் மோதியது.

இதில் காரை ஒட்டி சென்ற மாப்பிள்ளை மணிவேல் மற்றும் காரில் பயணம் செய்த உறவினர்கள் கருப்பணன், நடராஜ், முத்தம்மாள், ஆகிய 4 நபர்களும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் காரில் சிக்கிக் கொண்ட மகாலட்சுமி என்பவரை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்து 108 அவசர வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதிவேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று அருகிலிருந்தவர்கள் கூறவே பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவா, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தை பார்வையிட்டார்.

மேலும் இறந்தவர்களின் உடல்களை தனியார் வாகனத்தின் மூலம் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்து குறித்தும் இறந்தவர்களின் தகவல் குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெண் பார்ப்பதற்காக சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு மாப்பிள்ளை உயிரிழந்ததால் உறவினர்கள் கதறி அழும் காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கேட்டு  சொந்த ஊரான செம்மடைப்பட்டி மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

#MIvDC

ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா.

Published:Category:

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

#MIvDC

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்.

Published:Category:

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

#MIvDC

யாழில் 17 குடும்பங்கள் பாதிப்பு : அடுத்த 36 மணி நேரம் அவதானம்.

Published:Category:

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

#MIvDC

நீதிமன்ற வளாகத்தில் அச்சுறுத்தப்பட்ட தாய்.

Published:Category:

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

#MIvDC

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

Published:Category:

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

#MIvDC

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

Published:Category:

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#MIvDC

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Published:Category:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

#MIvDC

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Published:Category:

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

#MIvDC

அதிஉயர் புயல் எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை!

Published:Category:

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

#MIvDC

சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா!

bottem fooder