Published:Category:

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1480 பேர் கைது : 218 வாகனங்கள் பறிமுதல்.

#MIvDC

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1480 பேர் கைது : 218 வாகனங்கள் பறிமுதல்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 1480 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 218 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது முகக்கவசங்கள் அணியாத மற்றும் நபர்களுக்கிடையில் இடைவெளி  பேணாமை தொடர்பில் மாத்திரம் 39 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணம், குளியாப்பிட்டி ஆகிய பகுதிகளில் 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டதை மீறியமை தொடர்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி தொடக்கம் இன்று சனிக்கிழமை காலை ஆறு மணிவரையில்  221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் பயன்படுத்திய 40 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய இதுவரையில் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக அதிகூடிய தொகையானோர் இதன்போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில்  சமூக இடைவெளி பேணாதோர் மற்றும் முகக்கவசங்கள் அணியாதோரை கைது செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த போதிலும் நேற்றுமுன்தினம் வரையில் பொலிஸார் அத்தகைய ஒருவரையும் கைது செய்யவில்லை. அறிவுறுத்தல்களை மாத்திரமே வழங்கி வந்தனர்.

எனினும் நேற்று வெள்ளிக்கிழமை முதல் இத்தகைய நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன்,அதற்கமைய இது தொடர்பில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் களுத்துறை,கம்பஹா,நீர்கொழும்பு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டி மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளுக்கு  கடந்த மாதம் 4 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 1480 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 218 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பலி!

#MIvDC

காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பலி!

Published:Category:

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

#MIvDC

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

Published:Category:

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

#MIvDC

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

Published:Category:

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

#MIvDC

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

Published:Category:

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

#MIvDC

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

Published:Category:

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

#MIvDC

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

Published:Category:

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

#MIvDC

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

Published:Category:

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

#MIvDC

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

Published:Category:

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது.

#MIvDC

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது.

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் 2058 குடும்பங்கம் பாதிப்பு.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் 2058 குடும்பங்கம் பாதிப்பு.

  • Thedipaar