Published:Category:

யாழில் கொரோனா அச்சநிலை.

#MIvDC

யாழில் கொரோனா அச்சநிலை.

யாழில் கொரோனா அச்சநிலை தொடர்பா வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிவிப்பில்,

 “கொழும்பில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன் சுயதனிமைப்படுத்தலையும் கடைபிடிக்காது யாழ். மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.

பின்னர், அவரைப் பற்றிய தகவல் சுகாதாரத் திணைக்களத்தினருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளது.

அதனால், இவர் சென்று வந்த அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு தனிமனிதனின் சமூகப் பொறுப்பற்ற தவறான நடவடிக்கையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாது தவிர்ப்பதற்கு இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021 222 6666 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு விபரங்களை அறியத்தர வேண்டும்.

இதன்மூலம், தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும்.

இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்” என்று வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

#MIvDC

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

Published:Category:

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

#MIvDC

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

Published:Category:

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

#MIvDC

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

Published:Category:

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

#MIvDC

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

Published:Category:

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

#MIvDC

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

Published:Category:

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

#MIvDC

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

Published:Category:

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

#MIvDC

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

Published:Category:

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

#MIvDC

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

Published:Category:

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

#MIvDC

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

Published:Category:

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

#MIvDC

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

  • Thedipaar