போர்க்குற்றவாளியை கனடா தூதுவராக ஏற்பதா? எதிர்ப்பை பதிவு செய்ய Change.org மனு சமர்பிக்க வாருங்கள்!
போர்க்குற்றவாளியை கனடா தூதுவராக ஏற்பதா? எதிர்ப்பை பதிவு செய்ய Change.org மனு சமர்பிக்க வாருங்கள்!
ஓய்வுபெறவுள்ள விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். சுமங்கல டயஸ் உள்ளடங்கலாக மேலும் எட்டுப்பேரின் பெயர்கள் உயர்பதவிகள் தொடர்பான பாராளுமன்றக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த நிலையில் வெளிநாட்டுத் தூதுவர்களாகச் சேவையாற்ற இலங்கை அரசாங்கத்தினால் பெயரிடப்பட்ட ஏழு புதிய தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது. எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும் நியமிப்பதற்கான அனுமதியும் இதன்போது வழங்கப்பட்டது.
இந்த நியமனத்தை கனேடிய அரசு ஏற்ற பின்னரே இவர் தூதுவர் பதவியை ஏற்க முடியும். கனேடி அரசு இவரது நியமனத்தை ஏற்குமா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஏனெனில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வரும் கனேடிய அரசு, போரில் முக்கிய பங்காற்றிய எயார் மார்ஷல் சுமங்கல டயஸ்
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் 57,58,59ஆவது படைப் பிரிவுகளுடன் இணைந்து அந்தப் படைப்பரிவின் தரைத் தாக்குதல் நடவடிக்கைகளுக்குத் தேவையான விமானத் தாக்குதல்களை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கடமையாற்றியிருந்தார். அந்தத் தாக்குதல்களில் பொது மக்கள் பலரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பான பதிவுகள் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த ஆவணங்களில் உள்ளன. கனேடிய அரசும் அவ்வப்போது இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டிருந்தன. ஜெனிவா மனித உரிமைச் சபையிலும் அதன் பிரதிபலிப்புகள் தெரிந்தன.
ஏற்கனவே போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான பலரின் நியமனங்களை கனேடிய அரசு நிராகரித்துள்ள நிலையில் போர்க்குற்றவாளி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் நியமனத்தை கனேடிய அரசு ஏற்றுக்கொள்ளது. இருந்த போதிலும் இதன் தீவிரத்தை உணர்த்தும் வண்ணம், https://www.change.org/ ஆன்லைன் மனு சமர்பிக்கும் தளத்தில், சுமங்கல டயஸின் நியமனத்திற்கு எதிராக உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். உங்கள் பங்களிப்பையும் இடம்பெறச்செய்ய பின்வரும் இணைப்பில் சென்று பதிவு செய்யவும். https://www.change.org/p/fran%C3%A7ois-philippe-champagne-canada-should-reject-the-appointment-of-the-genocidaire-sumangala-dias-82c5f1d9-9d29-452c-9a9e-d30c6ebe7159
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.
பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.
99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!
ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!
பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!
கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.
100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!