இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி!
இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி!
இந்தியாவில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் நடந்த கார் பேரணியில் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்துச் சென்றன.
இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் கார் பேரணி நடத்தினர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை இந்த பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கார்கள் மற்றும் டிரக்குகளில் கோரிக்கை பதாகைகள் மற்றும் கனடா கொடிகளை கட்டியபடி சென்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பலர், இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் ஆழமான உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டிருப்பதாக தெரிவித்தனர். கனடாவில் உள்ள இந்தோ-கனடிய சமூகத்தில் பலர் இந்தியாவின் பஞ்சாப் பிராந்தியத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.
பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.
99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!
ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!
பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!
கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.
100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!