Published:Category:

விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை!

#MIvDC

விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை!

விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'. இதில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதில் 'ராசிமான்' என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காட்சியில் அந்த பெயர் பொறித்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை இக்காட்சியில் கிண்டல் செய்து இருப்பதாக கருதி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் இப்படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில்...

"நீண்ட நெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை ஒன்றையே ஒற்றை இலக்காக வைத்துக்கொண்டு கடந்த பதினொரு ஆண்டுகாலமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இளமையைத் தொலைத்து பொருளாதாரத்தை இழந்து கட்டமைத்துவரும் கட்சி நாம் தமிழர் கட்சி. 

நேற்று வெளியான தங்களது திரைப்பட முன்னோட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கும், எங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கும் எதிரானதுபோலக் கட்சியின் கோட்பாடுகளை களங்கப்படுத்துவதுபோல சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்குகிறது.

இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டபொழுது, "தெரியாமல் நடந்துவிட்டது. அந்த மாதிரி காட்சிகளை சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கிவிடுகிறேன் என உறுதி அளித்துள்ளார். 

இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குநர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக் காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுவதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். 

இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள். இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகு விரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள்" என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.

#MIvDC

நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.

Published:Category:

இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!

#MIvDC

இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!

Published:Category:

ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.

#MIvDC

ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.

Published:Category:

கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.

#MIvDC

கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.

Published:Category:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.

#MIvDC

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.

Published:Category:

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

#MIvDC

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

Published:Category:

சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.

#MIvDC

சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.

Published:Category:

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

#MIvDC

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

Published:Category:

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.

#MIvDC

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.

Published:Category:

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.

#MIvDC

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.

  • Thedipaar