Published:Category:

மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார்!

#MIvDC

மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார்!

தஞ்சாவூரில் கல்லூரித் தாளாளர், மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

மாணவியின் தாயுடனான கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. 

தஞ்சாவூரிலிருந்து மருத்துவக் கல்லூரி வழியாக வல்லம் செல்லக்கூடிய சாலையில் கிரிண்லேண்ட் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியின் தாளாளரான 55 வயது செல்லய்யா என்பவர் மீது கல்லூரியில் படிக்கின்ற மாணவி ஒருவர், தனது தாயுடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் 100% வேலைவாய்ப்பு, படிக்கும்போதே 6000 முதல் 12000 ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய வேலை, முதலாம் ஆண்டு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் அடுத்தடுத்த ஆண்டுகள் வேலைவாய்ப்பில் வரும் வருமானத்தை கொண்டு கட்டணத்தை செலுத்தலாம் என கவர்ச்சிகரமான விளம்பரத்தில் மயக்கி பலரை இக்கல்லூரியில் சேர்த்துள்ள செல்லய்யாவுக்கு இரண்டு மனைவிகள் என்று கூறப்படுகின்றது.

இதில் செல்லய்யா, இரண்டாம் தாரமாக்கிக் கொண்டவர் கல்லூரிக்கு வேலைக்கு வந்த பெண் என்றும், அந்த பெண்ணின் மூலமாக கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் மற்றும் வேலைக்கு வரும் பெண்களை ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் பாலியல் ரீதியாகக் கட்டாயப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த ஆண்டு கேட்டரிங் படிப்பு சேர்ந்த தன்னிடமும் அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதை செல்லய்யா வாடிக்கையாக செய்து வந்ததாகவும், தான் எதிர்ப்பு தெரிவித்த போது, அவரது மகள் வயதுள்ள தன்னை மனைவியாக்கிக் கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

தனது தாயிடம் கூறியதாகவும், அவர் வந்து கல்லூரி தாளாளரிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள கல்லூரி தாளாளர் செல்லய்யா, தான் மாணவியுடன் பழகியதில்லை என்றும் அவருடைய தாயுடன் கொண்ட நட்பு காரணமாக மாணவிக்கு உதவியதாகவும் இடையில் அவர், பணத்தாசை பிடித்து தன்னை மிரட்டியதாகவும், ஒரு கட்டத்தில் அவர்கள் கேட்ட பணத்தையும் மாணவியின் சான்றிதழையும் கொடுத்த பின்னரும், தன் மீது பழி சுமத்துவதாகவும் தெரிவித்த செல்லய்யா, கூடா நட்பால் தனக்கு கேடு நடந்துள்ளதாக வேதனை தெரிவித்தார்

புகார் அளித்த மாணவி மற்றும் அவரது தாயிடமும், படிக்கும் போதே வேலை என கூறி கல்விக் கட்டணம் வசூலித்த செல்லையாவிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது

#MIvDC

பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது

Published:Category:

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கு  பிரதமர் அறிவுறுத்தல்

#MIvDC

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கு  பிரதமர் அறிவுறுத்தல்

Published:Category:

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

#MIvDC

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

Published:Category:

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

#MIvDC

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

Published:Category:

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

#MIvDC

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் - சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

Published:Category:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

#MIvDC

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை

Published:Category:

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

#MIvDC

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி- வர்த்தமானி வெளியானது

Published:Category:

கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய  பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.

#MIvDC

கிளிநொச்சியில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய  பழ.நெடுமாறன் குணமடைய விசேட வழிபாடு.

Published:Category:

நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

#MIvDC

நிரவ் மோடியை நாடுகடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

Published:Category:

அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!

#MIvDC

அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!

  • Thedipaar