Published:Category:

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

#MIvDC

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

யாழ்.மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணியற்றுள்ளபோது தனியாருக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்துக்குச் சுவீகரிக்க முயற்சிக்கின்றமை போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுவதாக ரெலோவின் யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்

நேற்று (செவ்வாய்க்கிழமை)  தீவகத்தில் நில அபகரிப்பிற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, “தீவகத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்திற்குச் சுவீகரிப்பதற்காக நேற்று முன்தினம் வருகை தந்திருந்த அதிகாரிகள், மக்களின் எதிர்ப்பினை அடுத்துத் திரும்பினர்.

மேலும் மண்கும்பானில் பொதுமக்களுடைய காணிகளை அபகரிப்பதற்கு அதிகாரிகள் வருவார்கள். அவர்களை அளவீடு செய்ய விடாது திருப்பி அனுப்புவதற்காக காத்திருந்தோம். பின்னர் வேலணை பிரதேச செயலகம் முன்னும் போராட்டம் நடத்தியுள்ளோம். 

பிரதேச செயலாளர் பொதுமக்களின் எதிர்ப்பினை காணி அமைச்சுக்குத் தெரியப்படுத்தி, அமைச்சின் அறிவுறுத்தல் பெறும் வரையில் காணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படாதென உத்தரவாதம் அளித்துள்ளமையால், இன்றைய போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றது.

இவ்வாறாக எமது மண்ணில் எமக்குச் சொந்தமான பிரதேசத்தில் வளமான காணிகளை இராணுவத்தினர், யுத்தத்தின்போது கையகப்படுத்திவிட்டு, இன்று அவற்றை சட்ட ரீதியிலான நிரந்தர உடமையாக மாற்றுவதற்கு பலாத்காரம் பிரயோகிக்கப்படுகின்றது.

மேலும் மக்கள், சொந்தமாக காணியினைக் கொண்டிருக்கும் உரிமையைக்கூட அரசாங்கம் நசுக்குகின்றது. யுத்தத்தின் பின்னர் மக்கள் தமது காணிகளில்  செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு வசதியாக இராணுவத்தினை அரசாங்கம் முகாம்களுக்குள் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் மக்களின் நிலங்களையும் அவர்களது உரிமைகளையும் இராணுவமயப்படுத்துவதில் அரசாங்கம் கரிசனை கொள்கின்றது. 

முதலில் சரியான கொள்கை ஒன்றை வகுத்து அரசாங்கம் காணியற்ற 10 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கும் நிலங்களை வழங்க வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை இராணுவ வழிமுறைகள் ஊடாக அடக்கிவிடலாம் என்பதை எடுகோலாகக் கொண்டு அரசாங்கம் செயற்படக்கூடாது.

எமது ஜனநாயக உரிமைகளுக்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும். எமது மக்களின் நிலங்கள் அவர்களுக்கானதே என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என  தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

#MIvDC

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

Published:Category:

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது

#MIvDC

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது

Published:Category:

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

#MIvDC

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

Published:Category:

“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை

#MIvDC

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை

Published:Category:

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்

#MIvDC

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்

Published:Category:

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

#MIvDC

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

Published:Category:

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

#MIvDC

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

Published:Category:

உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர்  சம்மேளனத்தின் அறிவுறுத்தல்

#MIvDC

உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர்  சம்மேளனத்தின் அறிவுறுத்தல்

  • Thedipaar