Published:Category:

கனடாவின் ரியல் ஹீரோக்கள் தமிழர்கள் - தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் பிரதமர் புகழாரம்!

#MIvDC

கனடாவின் ரியல் ஹீரோக்கள் தமிழர்கள் - தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் பிரதமர் புகழாரம்!

கனடாவில் ஜனவரி மாதம், தமிழ் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த முறை பெருந்தொற்று காரணமாக கொண்டாட்ட நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் Gary Anandasangaree முயற்சியில், மெய்நிகர் தமிழ் பாரம்பரிய மாத விழா நடைபெற்றது.

ஸ்கார்பாரோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி ஏற்பாடு செய்த “தை பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள்” கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துக் கொண்டார்.

மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்ற இன்றைய கொண்டாட்டத்தில் அமைச்சர் அனிதா ஆனந்த், ரொறொன்ரோ நகர முதல்வர் ஜான் டோரி ஆகியோரும் உரையாற்றினர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவை கட்டியெழுப்பியதில் தமிழர்களின் மகத்தான பங்கு குறித்து பேசினார்.

அப்போது உரையாற்றிய அவர், இந்த தமிழ் பாரம்பரிய மாதம், கனடியர்களை கடற்கரை முதல் கடற்கரை வரை பாதுகாப்பாக வைத்திருக்க கோவிட்-19 தொற்றுநோயால் இவ்வளவு தியாகம் செய்த அனைத்து தமிழ்-கனடிய முன்னணி மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.

கனடாவின் வளர்ச்சியில் தமிழர்கள் மாபெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். நாட்டின் அரசியலிலும், கொள்கை வகுப்பதிலும் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான நிகழ்வுகளை கனடா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இடர்கள் பல கடந்து தமிழ் சமூகம் உலக அளவில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி, கமலா ஹாரிஸ் வளர்ச்சியை வைத்தே, தமிழ் சமூகத்தின் வேகத்தை உலகம் அறிந்துகொள்ள முடியும். தமிழர்கள் நிஜ ஹீரோக்கள். இந்த பெருந்தொற்று காலத்திலும், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். 

மற்ற மரபு திங்கள் கொண்டாட்டம் போல இந்த முறை பொது நிகழ்வு எதுவும் இல்லைஎன்றாலும், ஜனவரி மாதம் தமிழ் சமூகத்துக்கானதாகும். இதனை உணர்வுப்பூர்வமாக கடைபிடிப்போம்" என பேசியுள்ளார்.

வீடியோ இணைப்பு: https://youtu.be/ypA8l7kKnm8

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

#MIvDC

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

Published:Category:

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

#MIvDC

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

Published:Category:

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

#MIvDC

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

Published:Category:

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

#MIvDC

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

Published:Category:

முக்கியமான போட்டியில்  பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

#MIvDC

முக்கியமான போட்டியில்  பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

Published:Category:

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

#MIvDC

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Published:Category:

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

#MIvDC

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

Published:Category:

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

#MIvDC

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

Published:Category:

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

#MIvDC

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

Published:Category:

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

#MIvDC

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

  • Thedipaar