மக்களிடம் உள்ள அச்சத்தை போக்குவதே முக்கியம்! முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்!
மக்களிடம் உள்ள அச்சத்தை போக்குவதே முக்கியம்! முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்!
ஆஸ்திரேலியா பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கி உள்ளது.
இதற்கு முன்னோட்டமாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் அச்ச உணர்வை நீக்கி, நம்பிக்கையூட்டும் வகையிலும், தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, நேற்றே பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியே அடுத்த சில வாரங்களுக்கு பொது மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. அடுத்த வாரத்திற்குள் 60000 டோஸ் மருந்து செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் சுமார் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆஸ்திரேலியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதேபோல் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கும் தற்காலிக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி கிரெக் ஹன்ட் கூறி உள்ளார்.
இதுஒருபுறமிருக்க, ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!
நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!
இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!
பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!
ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!
இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு
கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.
8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!
ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்? உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்? உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!