Published:Category:

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

#MIvDC

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

இந்தியாவை வெளிப்படையாக பகைக்காது 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்காகவே புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் களமிறங்கியுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் இணைப்பேச்சாளரும், மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளின் பின்னால் உள்ள அரசாங்கத்தின் சூட்சுமமான திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு தேவையான சர்வாதிகாரத்தினை வலுப்படுத்துவற்கான ஏற்கனவே அரசியலமைப்பில் 20ஆவது திருத்தச்சட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

அதன் மூலம் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தபட்டிருக்கின்றது.

தற்போதைய நிலையில் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காகவும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டிற்கு அமைவாகவும் அடிப்படைச்சட்டத்தினை மாற்றுவதற்காகவுமே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

உண்மையிலேயே உருவாக்கப்படும் அரசியலமைப்பானது சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவோ அல்லது இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்க கூடியதாகவோ அமையும் என்று நாம் கருதவில்லை.

அரசாங்கத்தின் சமகாலச் செயற்பாடுகளின் அடிப்படையில் பார்க்கின்றபோது புதிய அரசியலமைப்பானது தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிரானதாகவே அமையும் என்றே எண்ண முடிகின்றது.

இந்நிலையில் மிக முக்கியமாக 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அகற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது.

அதன் மூலம் மாகாண சபை முறைமைகளை முழுமையாக நீக்குவதும் மத்திய அரசாங்கத்தின் மூலம் நேரடியான ஆட்சியை முன்னெடுப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகவும் உள்ளது.

ஆகவே 13ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்கி அதன் மூலம் மாகாண சபை முறைமைகளை நீக்கப்படுமாயின் அதனால் இந்தியாவின் அழுத்தங்களுக்கு அல்லது நேரடியான தலையீடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படலாம் என்று இலங்கை அரசாங்கம் கருகின்றது.

எனவே, புதிய அரசியலமைப்பின் பெயரால் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவதன் மூலம் தமது திட்டத்தினை சூட்சுமமாக முன்னெடுப்பதற்கு அசராங்கம் காய்களை நகர்த்துகின்றது.

இவ்வாறான செயற்பாட்டின் மூலமாக இந்தியாவை பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்படாது என்பதும் அரசாங்கத்தின் அரசியல் கணக்காக உள்ளது.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்கவுள்ளதாக கூறும் அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தகமாவும், மாகாண சபைகள் தொடர்பாகவும் தமது நிலைப்பாட்டினை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

#MIvDC

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

Published:Category:

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

#MIvDC

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

Published:Category:

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

#MIvDC

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

Published:Category:

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

#MIvDC

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

Published:Category:

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

#MIvDC

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

Published:Category:

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

#MIvDC

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

Published:Category:

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

#MIvDC

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

Published:Category:

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

#MIvDC

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

Published:Category:

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

#MIvDC

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

Published:Category:

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

#MIvDC

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

  • Thedipaar