Published:Category:

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

#MIvDC

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

கொரோனா அச்சுறுத்தலினால்  மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி  கிளைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள  கல்முனை மக்கள் வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஜந்து ஊழியர்களுக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து கல்முனை மாநகரிலுள்ள பிரதான கிளை மூடப்பட்டிருந்தது.மேலும் முகாமையாளர் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைகளுக்குச் சென்று தமது கருமங்களை நிறைவேற்றிக்கொள்ளுமாறு அறிவித்தல் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தில்  கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட 3வது மக்கள் வங்கிக்கிளை இதுவாகும்.

அத்துடன் கடந்த மாதம் இறுதி கிழமைகளில்  சாய்ந்தமருது மக்கள் வங்கிக்கிளையில்  பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து   சாய்ந்தமருதுக்கிளையும் கடந்தவாரம் மூடப்பட்ட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதே போன்று கடந்த மாதம் கொரோனாத்தொற்று காரணமாக 14 நாட்கள் மூடப்பட்டிருந்த காரைதீவு மக்கள் வங்கிக்கிளையும் மீண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை(25)  திறக்கப்பட்டது.

காரைதீவு மக்கள் வங்கிக் கிளையில் 3 ஊழியருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி உடனடியாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் பிரிவில் அக்கரைப்பற்று, காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் கல்முனைத் தெற்கு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் கொரோனா வைரஸ் தொற்று அபாய  வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இறுக்கமான சுகாதார நடைடுறைகளை கடைப்பிடிக்குமாறும்இ கல்முனை பிராந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி டொக்டர் ஜி.சுகுணன் தெரிவித்திருந்தார்.

நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்களின் சதவீதம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுள்ளார்.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  மக்கள் வங்கிகளில் ஏனைய கிளைகளில்  கடமையாற்றும் ஊழியர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

#MIvDC

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

Published:Category:

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

#MIvDC

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

Published:Category:

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

#MIvDC

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

Published:Category:

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

#MIvDC

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

Published:Category:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

#MIvDC

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

Published:Category:

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

#MIvDC

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

Published:Category:

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

#MIvDC

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

Published:Category:

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

#MIvDC

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

Published:Category:

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

#MIvDC

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

Published:Category:

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

#MIvDC

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

  • Thedipaar