Published:Category:

இலங்கையில் மனித உரிமைக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீதான பயணத்தடை - கனேடிய லிபரல் அரசை வலியுறுத்தும் எதிர்கட்சி!

#MIvDC

இலங்கையில் மனித உரிமைக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீதான பயணத்தடை - கனேடிய லிபரல் அரசை வலியுறுத்தும் எதிர்கட்சி!

எதிர் கட்சியான கன்சவேட்டிவ் கட்சி இலங்கையில் மனித உரிமைக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீதான பயணத்தடையை விதிக்குமாறு கனேடிய லிபரல் அரசைக் கோரியுள்ளது. கனடாவில் நடைமுறையில் உள்ள மக்கன்சி சட்டவிதிகளின் பிரகாரம் அதனை உடன் செய்யுமாறு வலியுறுத்துகின்றது.

இச்சட்டவிதிகள் சம்மந்தப்பட்டவர்கள் மீதான மேலும் பல நடவடிக்கைகளுக்கும் வலிகோலும் என்பதுவும், இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

குறித்த அறிக்கையில், தாம் இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்ந்துள்ள அவர்கள் ரூடோ தலைமையிலான லிபரல் அரசு அது குறித்து அமைதி காப்பது குறித்து தமது விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

2019 இல் இறுதியாக நடைபெற்ற கனேடிய பொதுத்தேர்தலுக்கு முன்னர் கனேடியப் பாராளுமன்றத்தில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தமிழர் இனப்படுகொலை குறித்து சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டும் என ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற தீர்மானத்தை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி, அது குறித்து மேலதிக நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்தில் ஜெனீவாவில் சிறீலங்கா குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கடந்த காலங்களை விட முன்னேற்றகரமாக அமைந்தாலும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் மீதான சுயாதீன சர்வதேச விசாரணையையோ அல்லது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்களையோ அது உள்ளடக்கவில்லை எனவும் கனேடிய எதிர்கட்சி கரிசனை வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் உள்நாட்டில் பொறுப்புக்கூறல் விடயத்தில் எவ்வித முன்னெடுப்புக்களை செய்வதற்கான முறைமைகளையோ, விருப்பையோ கொண்டிருக்கவில்லை என்ற ஆணையாளரின் கூற்றை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் , கோரிக்கைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை கனேடிய அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. சிறீலங்கா அரசு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தமிழர்கள் மீது சமீபத்தில் விதித்துள்ள தடைகள் குறித்து தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ள அறிக்கை மனித உரிமையை முன்னேற்ற தொழிற்படும் கனேடிய தமிழர் அமைப்புக்களின் நியாயபூர்வமான விமர்சனங்களை தடைகள் மூலம் எதிர்கொள்வது முறையல்ல எனவும் கடிந்துள்ளது.

சிறீலங்காவில் தற்போது நிலவும் பல நிலைமைகளை தனது அறிக்கையில் குறிப்பிட்டு அவை குறித்து தனது ஆழ்ந்த கரிசனையையும் கனேடிய எதிர்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் இடித்தொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி விடயத்தையும் நினைவு கூர்ந்து, போரில் கொல்லப்பட்டவர்களுக்கான பொதுமக்கள் நினைவு ஒன்றுகூடல்கள் தடுக்கப்படுவது குறித்த கரிசனையையும் வெளியிட்டுள்ளது.

ஐ.நா தீர்மானத்தை கடந்து கனடா உட்பட சர்வதேச சமூகம் தமது அடுத்த கட்ட நடிவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் என்பதை வலியுறுத்தும் வகையிலான முதல் குரலாக கனேடிய எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் அறிக்கையை கொள்ளலாம். 
        

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Published:Category:

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

#MIvDC

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

Published:Category:

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

#MIvDC

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

Published:Category:

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

#MIvDC

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

Published:Category:

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

#MIvDC

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

Published:Category:

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

#MIvDC

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

  • Thedipaar