Published:Category:

நாளை நாம் பிச்சைக்கார்களாகப் போகிறோமா? சுய மரியாதையோடு நடமாடப் போகிறோமா? கடைசி கட்டத்தில் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தி!

#MIvDC

நாளை நாம் பிச்சைக்கார்களாகப் போகிறோமா? சுய மரியாதையோடு நடமாடப் போகிறோமா? கடைசி கட்டத்தில் தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. நாங்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு இலவச வாஷிங் மெஷின்,ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்பன உள்ளிட்ட 163 அறிவிப்புகளுடன் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட 500 திட்டங்களுடன் திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதுபோல, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்பது உள்ளிட்டவாக்குறுதிகளுடன் அமமுக தனது தேர்தல் அறிக்கையையும், வீட்டுக்கு ஒரு கணினி, இணையதள வசதியுடன் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கட்சிகள் அனைத்தும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கின்றன.

இந்நிலையில், தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயம் அரசு வேலையாக அறிவிக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை சொல்லி, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்து வந்தார். 

மற்ற கட்சிகளின் செயல்பாட்டை வைத்து பார்க்கும் போது, கொள்கை அடிப்படையிலும், நேர்மை அடிப்படையிலும் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கிறது. அக்கட்சியின் வேட்பாளர்கள் ஒருவர் மீது கூட குற்றவியல் வழக்கு கிடையாது.

நேர்மையான வேட்பாளர்களுடன், மக்களின் நலன் ஒன்றை மட்டுமே முன் வைத்து களமிறங்கும் ஒரே அரசியல் கட்சியாக திகழ்கிறது. இலவசங்களை அள்ளி வீசுவோம் என்று கூறும் தேர்தல் அறிக்கை கூட உருவாக்க முடியாத நிதி சிக்கலில் தவிக்கும் நேர்மையான கட்சி நாம் தமிழர். 

ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு, தமிழகத்திலிருந்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடந்து கொண்டிருந்த போது, உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்தன.

அந்த சமயத்தில் ராஜபக்சேவும், கோத்தாபயா  ராஜபக்சேவும் பயந்தது ஒரே ஒரு விடயத்திற்காக தான். அது என்னவென்றால், தமிழகத்தில் எழுச்சி வெடித்துவிடுமோ என அஞ்சினர். இன அழிப்பு காலத்தில், தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டிருந்தால், இலங்கைக்கு அது கடும் நெருக்கடியாக மாறியிருக்கும்.

அப்படி ஒரு சம்பவத்தை நடக்காமல் பார்த்துக்கொண்டது திமுக அரசு. இலங்கை போர் பற்றி, தமிழக ஊடகங்களில் ஒளிபரப்புவதை கூட, கட்டுப்பாடுகளுடன் மேற்கொண்டனர். தொப்புள் கொடி உறவுகள் துடி துடித்து மாய்வது தெரியாமலே, தமிழக மக்கள் சாதாரணமாக அன்றைய பொழுதை கடந்து சென்றனர்.

திமுக செய்த சதியால், லடசக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். செய்த பாவத்திற்கு பிராயிச்சித்தமாக ஒருவேளை உணவு உண்டுவிட்டு, செரிக்க இருக்கும் மூன்று மணி நேர இடைவெளியில் வெற்று உண்ணாவிரத அறிவிப்பை வெளியிட்டு, அடுத்த வேலை உணவருந்தினார் கருணாநிதி.

கருணாநிதி இலங்கைக்கு செய்த உதவிக்கு கைமாறாக, கருணாநிதியின் மகள் இலங்கைக்கு அழைத்து ராஜபக்சேவால் பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டார். திமுக ஆட்சிக்கு பிறகு வந்த, அதிமுக ஆட்சியிலும் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொள்ளப்படவில்லை.

இப்படி இரு திராவிட கட்சிகளுக்கு இடையில் சிக்கி, இலவச மோகத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, மாற்று அரசியலுக்கான தேவை ஏற்பட்டுள்ளது. காமராஜருக்கு சொல்லப்பட்டது போல, படிப்பறிவு இல்லாதவர்களும் பண்பானவர்களாக இருப்பார்கள் என்ற கூற்று பொய்யாகிவிட்டது.

இன்றைக்கு படித்தவர்களே. சுயசிந்தனை இன்றி முடிவெடுப்பதை கண் கூடாக காண முடிகிறது. இனியாவது இலவச அரசியல் பக்கம் சாயாமல், கொள்கை அடிப்படையில் நியமான கட்சியை தேர்ந்தெடுப்பது தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும். மற்ற கட்சிகளை ஒப்பிடும் போது, நாம் தமிழர் கொள்கையிலும் சரி, வேட்பாளர்கள் தேர்விலும் சரி, தனித்து நிற்கிறது. முடிவு உங்கள் கையில்! 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

Published:Category:

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

#MIvDC

உலக நாடுகளுக்கு சவால் - அடுத்து விண்வெளியை குறிவைக்கும் சீனா..!

  • Thedipaar