யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு – சீருடைகளும் பறிமுதல்!
யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு – சீருடைகளும் பறிமுதல்!
யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும் வெற்றிலை துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று அறிவித்தார்.
அத்தோடு, இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, குறித்த காவல் படையினர் நேற்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.
மேலும் காவல் படையின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் குறித்த காவல் படையின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல் துறை சீருடைகளை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, யாழ். மாநகர சபை ஆணையாளரை நேற்றைய தினம் இரவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார், நீண்ட விசாரணைகளை முன்னெடுத்து சுமார் 3 மணி நேரம் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.
அதனை அடுத்து காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறும் அவர்களின் சீருடைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் ஆணையாளருக்கு பணித்திருந்தனர்.
அதன்பிரகாரம் காவல் படையின் கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அவர்களின் சீருடைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக காவல் படையின் சீருடைகளை கொழும்புக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?
ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!
அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!
அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!
அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!
இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!
கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!