Published:Category:

மைத்திரிபால சிறிசேனவை நிரபராதியாக்கவா ?  60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது - இம்ரான் மஹ்ரூப் எம்.பி  சபையில்  கேள்வி?

#MIvDC

Listen to news

மைத்திரிபால சிறிசேனவை நிரபராதியாக்கவா ?  60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது - இம்ரான் மஹ்ரூப் எம்.பி  சபையில்  கேள்வி?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நிரபராதியாக்கவா பாராளுமன்றத்தில் அரச தரப்பின் 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது என திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார்.


நேற்று புதன்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த தாக்குதலின் பின் முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களால் இன்னொரு கண்கொண்டு பார்க்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன.

முஸ்லிம்கள் அணியும் தொப்பி அபாயமா? அவர்களின் குர்ஆன் தீவிரவாதத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது.

அவர்களின் வீடுகளில் இருந்த சிறிய கத்திகள் பயங்கர ஆயுதமாக பார்க்கப்பட்டன.

முஸ்லிம்களின் கடைகள் , முஸ்லிம் கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த அரசாங்கம் உருவாக்க இந்த தாக்குதலே பிரதான காரணியாக இருந்தது. அப்பொழுது எதிர்கட்சியில்  இருந்த இப்போது ஆளும் கட்சியில் உள்ளவர்கள் இந்த தாக்குதல் தொடர்பாக அப்பொழுது தெரிவித்த கருத்துக்கள் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இருபதாம் திருத்த சட்டத்தையும் நிறைவேற்ற அன்று குற்றம்சாட்டப்பட்ட பலர் இன்று சுற்றவாளியாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நடைபெற்றவுடன் இன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கடுமையாக விமர்ச்சித்தனர்.

ஆனால் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நிரபராதியாக்கவா பாராளுமன்றத்தில் அரச தரப்பின் 60 நிமிடங்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த தாக்குதலால் இலாபம் அடைந்தவர்கள் யார்? சிலரை காப்பாற்றும் நோக்கில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

#MIvDC

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

Published:Category:

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

#MIvDC

ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

Published:Category:

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

#MIvDC

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

Published:Category:

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

#MIvDC

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

Published:Category:

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

#MIvDC

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

Published:Category:

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

#MIvDC

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

Published:Category:

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

#MIvDC

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

Published:Category:

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

#MIvDC

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

Published:Category:

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

#MIvDC

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

Published:Category:

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

#MIvDC

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

  • Thedipaar