Published:Category:

மியான்மரில் போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.

#MIvDC

Listen to news

மியான்மரில் போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர்.

மியான்மரில் ஜனநாயக ரீதியிலான அரசை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மூன்றாவது மாதமாக ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவாகவும் பல தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் போராட்டக்காரர்களை ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதற்கு எதிராக சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன.

மியான்மரில் 5 நாள் புத்தாண்டு விடுமுறை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஆனால் ஜனநாயக ஆதரவு இயக்கத்தினர், தங்கள் வழக்கமான கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டு, ராணுவ ஆட்சி மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டங்களில் கவனம் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவில் நேற்று அறவழிப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, மருத்துவ தொழிலாளர்கள் பெரிய அளவில் கூடி இருந்தார்கள்.

ஆனால் அவர்களை விரட்டியடிப்பதற்காக அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்களில் பலரை சுற்றி வளைத்து கைது செய்த ராணுவம், துப்பாக்கிச்சூடு நடத்தியது.

அந்தப்பகுதியில் உள்ள ஒரு மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே மியான்மர் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம், இதுவரை அங்கு நடந்த போராட்டங்களில் 715 எதிர்ப்பாளர்களை ராணுவம் கொன்று குவித்துள்ளதாக கூறுகிறது.
 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

#MIvDC

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

Published:Category:

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

#MIvDC

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

Published:Category:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

#MIvDC

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

Published:Category:

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

#MIvDC

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

Published:Category:

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

#MIvDC

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar