Published:Category:

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்!

#MIvDC

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்!

ஈழத்தமிழருக்கு பொது வாக்கெடுப்பு ஏன் தேவை? பொது வாக்கெடுப்பிற்கான நியாயப்பாடுகள் எவை? என்பனவற்றிற்கு ஆதாரமாக உள்ளது எமது வரலாறே. ஐரோப்பியர்களில் இலங்கைத்தீவை இறுதியாக  ஆண்ட ஆங்கிலேயர்கள் 1795 ஆவணி 18 ஆம்நாள் திருகோணமலையைக் கைப்பற்றியதன் மூலம் ஒல்லாந்தர் வசமிருந்த யாழ்ப்பாண இராட்சியத்தின் ஒரு பகுதியைத் தமதாக்கிக் கொண்டனர். 

பின்னர் தொடர்ந்து,
•    1796 மாசி மாதம் கோட்டை இராட்சியத்தையும் 
•    1803 ஐப்பசி மாதம் யாழ்ப்பாண இராட்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த வன்னியை ஆண்டு வந்த பண்டார வன்னியனைத் தோற்கடித்தன் மூலம் வன்னிப்பிரதேசத்தையும் 
•    1815 மார்ச் 2ம் திகதி முதல் கண்டி இராட்சியத்தையும் கைப்பற்றி இலங்கைத்தீவில் இருந்த மூன்று நாடுகளையும் 1833 ல் ஒரே நிர்வாக அலகாக கொண்டு வந்தனர். 

இலங்கைத்தீவிலிருந்த மூன்று நாடுகளிலும் மொழியாலும் பண்பாட்டாலும் நீதி நெறிக்கான சட்டத்தாலும் வரி விரிப்பு முறையிலும் வேறுபட்டிருந்த இரு இனங்களையும் ஒரே நிர்வாக அலகின் கீழ் கொண்டு வந்த போதும் அந்த இனங்கள் தமது வாழ்வியலைத் தமக்குரிய நீதி முறைகளைக் கொண்ட சட்டங்களுக்கமைவாகப் பின்பற்றி வாழ வழி செய்திருந்தனர் 

பிரித்தானியாவிலிருந்து இலங்கை சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் என்ற முன்னெடுப்புகள் தொடங்கியதே 1926 ம் ஆண்டு பண்டாரநாயக்கா யாழ்ப்பாணம், கண்டி கரையோரம் (கோட்டை) ஆகிய பகுதிகளாக இலங்கையைப் பகுத்து அதாவது பிரித்தானியருக்கு முன்பு இருந்த அரசுகளின அடிப்படையில் ஒரு சமஸ்டி ஆட்சியே இலங்கைக்கு உகந்தது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதேவேளை திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் தமிழர்களும் சிங்களவர்களு; மொழியாலும், வாழ்வியல் சட்டங்களாலும், பண்பாட்டாலும் வேறுபட்டதோடு வௌ; வேறு நாட்டினர், தனித்துவமான தேசிய இனத்தவர்கள். எனவே இரு நாட்டினர் ஒரே நாடாக வேண்டுமானால் அரசியல் அதிகாரம் அதைத் தீர்மானிக்கும சபை உட்பட சகலவற்றிலும் 50ஃ50 என்ற வகையில் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு பொறிமுறையே அரசியல் யாப்பில் இடம் பெறவேண்டுமென்றார்.

பிரித்தானிய அரசால் இதற்காக நியமிக்கப்பட்;ட சோல்பரிப் பிரபு பிரித்தானியர் விளங்கிக் கொண்ட (அவர்களின் பாரவையில்) பாராளுமன்ற நடைமுறைக்கேற்ப இலங்கைக்கான அரசியலமைப்பை ஆக்கிக் கொண்டார.; இருப்பினும் சோல்பரிப் பிரபு அவர்கள் அரசியலமைப்பின் 29ம் விதியில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் 
29 ஆம் விதியானது:
29 (1)    :    இத் தீவின் அமைதிக்கும் ஒழுங்குக்கும் நல்லாட்சிக்குமாகப் பாராளுமன்றமானது இக் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கு அமைய சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
29 (2):    இச் சட்டங்கள் எதுவும்,
(அ)    எந்த மதத்தைக் கடைப்பிடிப்பதைக் கட்டுப்படுத்தவும் தடை செய்யவும் கூடாது
(ஆ)    ஏனைய சமூகங்களையோ மதங்களையோ சார்ந்தவர்கள் உட்படுத்தப்படாத கட்டுப்பாடுகளையும் குறை பாடுகளையும் ஏதாவது ஒரு சமூகத்தையோ மதத்தையோ சார்ந்தவர்கள் உட்படுத்தப்படக் கூடாது.
(இ)    ஏனைய சமூகங்களுக்கோ மதங்களுக்கோ வழங்கப் படாத முன்னுரிமைகளையும் சிறப்புகளையும் ஏதும் ஒரு சமூகத்திற்கோ மதத்திற்கோ வழங்கக் கூடாது.
(ஈ)     எந்த மத நிறுவனத்தின் அமைப்பு விதிகளையும் அந்த நிறுவனத்தின் ஆட்சி அதிகாரத்தின் ஒப்புதல் இன்றி மாற்றக் கூடாது. எனவே  எப்படி இருப்பினும் சட்டத்தின் மூலம் இணைந்தமைக்கப்பட்ட மத நிறுவனமாயின் அந்த நிறுவனத்தின் ஆட்சி அதிகாரத்தின் வேண்டுதலின் பெயரில் அன்றி வேறு எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது.
29 (3)        இப் பகுதியின் 2- ஆம் விதியின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடுடைய எந்தச் சட்டமும் முரண்பாடு அடைகின்ற அளவு எல்லை வரை செல்லுபடியாகாது. 

எனவே 1948 ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் எல்லாம் அரசியல் அமைப்புக்கு முரணானவை. செல்லுபடியாகாதவை. இப்படி இருந்த போதும் சிங்கள அரசு தமிழ் பேசும ;இனத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றித் தனது ஆட்சி அதிகாரத்தினால் நடைமுறைப் படுத்தி வந்தது.             

அரசியலமைப்புக்கு முரணாகத் தொடர்ந்து செயற்பட இயலாது என்று கண்ட சிங்கள அரசு 1972 ல் தம்மைக் குடியரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டது. அதற்கான ஆணையை வேண்டி 1970 தேர்தலில் அது பொது வாக்கெடுப்பாக வேண்டி நின்றது. குடியரசு வேண்டிப் போட்டியிட்ட அரசாங்கக் கூட்டணி 157 இடங்களில் 116 இடங்களைப் பெற்றது.

இவ்வாக்கெடுப்புக்கு சிங்களவர் பெரும்பான்மையாக ஆதரவளித்தார்கள் ஆனால் தமிழர் பிரதேசத்திலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களாவது இக் கோரிக்கையை ஏற்றுத் தெரிவு செய்யப்படவில்லை. 1972ல் குடியரசான சிங்கள அரசு தமிழீழத்தை ஆக்கிரமித்து நின்றது. இவ் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு தனியரசாக நாம் பிரிந்து வாழ விருப்புவோரை தமக்கு வாக்களிக்குமாறு அதாவது 1976 தீர்மானிக்கப் பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்கிறீர்களா? என்பதைக் கேட்டு தமிழர் மத்தியில் 1977 ல் நடைபெற்ற தேர்தலில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதை வேண்டிப் போட்டியிட்ட சகல கூட்டணி உறுப்பினர்களும் வெற்றிபெற்றனர். 

 எனவே 1977 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழினம் தனது நாட்டைத்தானே ஆளும் உரித்துள்ளது என்ற அடிப்படையில் தமிழர்கள் இயங்கத் தொடங்கினார்கள். இந்த அடிப்படையழல் தமிழர்கள் இக் கோரக்கைளை எடுக்கக் கூடாது எனக்கருதி சிங்களம் பல அடக்குமுறைச் சட்டங்களை இயற்றியது. (குறிப்பாக 6வது திருத்தச் சட்டம் ) இராணுவப் பலம் மூலம் தமிழர்களை அடக்கப் பல்வேறு வன் முறைகளைத் தமிழர்கள் மீது ஏவியது.

குறிப்பாக 1977 ல் தமிழர்களுக்கு எதிராக இடம் பெற்ற கொடூர வன்முறைச் செயல்கள் தமிழர்களின் பொது வாக்கெடுப்புக்கு எதிரானதே.  இவற்றை மீறி தமிழர் கிளர்ந்தெழுந்த போது சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்தில் பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்யத்தொடங்கியது. மக்கள் கூட்டம் கூட்டமாக தமது வாழ்விடங்களைத் தொலைத்துவிட்டு அகதிகளாக உயிர் தப்பி ஓடத் தொடங்கினார்கள்.

பல்வேறு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து அல்லல் பட்டார்கள்.  போக வழியின்றி எஞ்சியிருந்த மக்களைப் பாதுகாக்க பல இளையோர் ஆயுதம் ஏந்தினார்கள். விடுதலைப் புலிகளின் அளப்பரிய தியாகத்தால் தமிழீழம் என்கிற கருத்துருவாக்கம் இலங்கையிலும் புலம்  பெயர் தேசங்களிலும் வலுப் பெற்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதாரமாகக் கொண்டு புலம் பெயர் மக்களும் தமது தாயகம் திரும்ப வேண்டுமென்கிற வேட்கையில் வாழத் தொடங்கினார்கள். 

2009 முள்ளிவாய்க்காலில் பாரிய இனப்படுகொலையின் பின் உருவாகிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழரின் தாயகக் கனவை மெய்யாக்குவதற்கு உலகப் பரப்பில் தீவிரமாக இயங்கி வருகின்றது. முற்றிலும் வெளிப்படைத்தன்மையோடும் நாடுகளின் சட்டங்களுக்குட்பட்டும் இயங்கும் நா க த அரசாங்கம் பல நாடுகளின் அரச மட்டங்களிலும் ஐ நா சபையிலும் எமது மக்களின் இனப்பிரச்சனை பற்றி தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. 

உலகில் பல்வேறு நாடுகளில் விடுதலை வேண்டி போராடிவரும் இனக்குழுமங்கள் செல்லும் பாதைகளை ஆராய்ந்து எமக்குப் பொருத்தனைவற்றை முன்னெடுக்கவும் செய்து வருகின்றது. இவற்றில் முக்கியமாக முன்னெடுப்பாக 'தமிழர் மத்தியில் பொது வாக்கெடுப்பு' என்பதைத் தொடங்கியுள்ளது. இன அழிப்பு, அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், என்பனவற்றுக்கு ஆளான பல இனக் குழுமங்கள் இவ்வாறே பொதுவாக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தியுள்ளார்கள். 

பொது வாக்கெடுப்பு சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே நாடுகடந்த தமிழீழ இரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அப்போதுபோதுதான் இந்த வாக்கெடுப்பு மிகவும் பலமானதாக அமையும். இந்த வாக்கெடுப்பில் எவ்வாறான கேள்விகள் வைக்கப்படும்?, இதில் யார் பங்கெடுக்கலாம?;, இதனால் ஏற்படும் தாக்கங்கள் எவை?, நாம் வாழும் நாட்டில் இதற்கு சட்டப்படி இடமுண்டா? இலங்கையில் இதை நடாத்தலாமா? இதில் எடுக்கப்படும் முடிவிற்கு சட்ட வலு உள்ளதா? போன்ற பல கேள்விகள் பலர் மனதிலும் இருக்கும். 

சர்வதேச சமூகம் எமக்காக இதை முன்னெடுக்க வேண்டுமென்றால் இதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். எமது முயற்சிக்கு உலக நாடுகளோ, பொது அமைப்புகளோ ஆதரவு தரவேண்டுமெனில் 'நாம் எதை வேண்டுவது? எமது விருப்பு என்ன?'   என்பதை நாம் முதலில் தெளிவாகக் காட்டவேண்டும். பொது வாக்கெடுப்பில் தமிழர்கள் தமது ஏகோபித்த குரலில் காட்டும்போது அது நடைபெறும். இதற்காக நாம் மக்களை தெளிவூட்டி பல வழிகளில் ஊக்கப்படுத்த வேண்டும். இது ஒரு நீண்ட பயணம். தோடர்ச்சியான பல படிமுறைகள10டாக கொண்டு செல்லப்படும் போது தான் இம் முயற்றி நிச்சயம் வெற்றியைத் தரும். 

தமிழர் தலைவிதி தமிழர் கையில்
நாடுகடந்த தமிழீழ அரசங்கம்
கனடாப் பணிமனை

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Published:Category:

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

#MIvDC

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

Published:Category:

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

#MIvDC

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

Published:Category:

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

#MIvDC

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

Published:Category:

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

#MIvDC

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

Published:Category:

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

#MIvDC

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

  • Thedipaar