Published:Category:

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

#MIvDC

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 
சாதுக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர்.

நாளை முதல் இப்பணி மேலும் விரைவுபடுத்தப்படும் என தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். இந்த பரிசோதனையின் முடிவில் மேலும் பல சாதுக்களுக்கு தொற்று உறுதி செய்யப்படலாம் என தெரிகிறது.

இதனிடையே 2 நாட்களில் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கும்பமேளா நடைபெறும் பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.இதன் விளைவாக அங்கு கொரோனா தொற்று அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

அங்கு கடந்த 10 முதல் 14-ந்தேதி வரை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,701 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கானோரின் முடிவுகள் வர வேண்டியிருக்கின்றன. இதனால் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க வந்த அகாரா அமைப்புத் தலைவர் கபில் தேவ், உடல்நிலை பாதிக்கப்பட்டு உத்தரகண்ட் மாநிலம் டேஹ்ராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக டேஹ்ராடூன் காவல்துறை கண்காணிப்பாளர் சரிதா தோபல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அகில பாரதிய அகாடா பரிஷத் அமைப்பின் தலைவர் நரேந்திர கிரிக்கு ஏப்ரல் 11-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புனித நீராடாலுக்குச் சென்று வந்த மக்கள் மீண்டும் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும்போது கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

மதம் சார்ந்த கூட்டங்கள், சமூகக் கூட்டங்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் கூடக் கூடாது என உத்தராகண்ட் மாநில அரசு, ஏப்ரல் 15, வியாழக்கிழமை அன்று கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் கும்பமேளாவுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விதி விலக்கு இருப்பதாகவும் கூறியுள்ளது.

கும்பமேளா நிகழ்வில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரையான 15 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலிலும், அத்திருவிழாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

#MIvDC

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

Published:Category:

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

#MIvDC

பணம் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகாரில் ஹரிநாடார் கைது.

Published:Category:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

#MIvDC

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன்  சமல் ராஜபக்ச சந்திப்பு.

Published:Category:

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

#MIvDC

வெளிநாட்டு உதவிகள் எங்கே ? ராகுல் கேள்வி

Published:Category:

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

#MIvDC

இலங்கையில் விரைவாக உயரும் கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

  • Thedipaar