Published:Category:

பயனாளர்களுக்கு இழப்பீடு தருவதாக அறிவிப்பு - Rogers நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

#MIvDC

பயனாளர்களுக்கு இழப்பீடு தருவதாக அறிவிப்பு - Rogers நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பிரபல தொலைத்தொடர்பு வலையமைப்பு ரோஜர்ஸ் நிறுவனம் சமீபத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கி இருந்தது. இதனால் ரோஜர்ஸ் நிறுவனத்தின் பல்வேறு பயனாளர்கள் வலையமைப்பின் பக்கத்தை உபயோகிக்க முடியாமல் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.

இதனைத் தொடர்ந்து ரோஜர்ஸ் வலையமைப்பின் மென்பொருள் மாற்றத்தின்போது தொழில்நுட்ப கோளாறு திடீரென ஏற்பட்டதால் ரோஜர்ஸ் நிறுவனம் நேற்றையதினம் பகிரங்கமாக பயனாளர்களிடம் மன்னிப்பு கோரியது.

பின்னர் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மற்றும் விரைவில் வலையமைப்பு இயக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தனர். தற்பொழுது ரோஜர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறினால் பயனர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு ரோஜர்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்குவதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. வலையமைப்பு தொழில்நுட்ப கோளாறுகளால் ரோஜாச் நிறுவனத்தின் பல்வேறு பயனாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே பயனாளர்களை திருப்திபடுத்தும் வகையில் ரோஜர்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்குவதாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் இழப்பீடு ஆனது நேரடியாக வழங்கப்படாது அடுத்த மாதத்தில் வருகின்ற மாதாந்திர பற்று கணக்கிலிருந்து குறைத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பயனாளர்கள் முன்பு அளித்துள்ள கொடுப்பனவு அளவைப் பொருத்தே இழப்பீடு வழங்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பயனர்கள் நிறுவனத்தின் சேவையை பாராட்டியுள்ளனர் என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ரோஜர்ஸ் நிறுவனத்தின் சேவையை பயனர்கள் அனைவரும் சரியாக உபயோகித்து கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

Published:Category:

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

#MIvDC

திருகோணமலையில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மரணங்கள்.

Published:Category:

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

#MIvDC

மே மாதம் 07 - 15 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 மரண விபரம்.  

Published:Category:

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

#MIvDC

மன்னாரில் உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள்.

  • Thedipaar