Published:Category:

ஒன்ராரியோவை மூன்றாம் அலைக்குள் இழுத்துச் செல்ல டக் போர்டு தான் காரணம் - என்.டி.பியின் தலைவர் ஆண்ட்ரியா ஹோர்வர்த் பரபரப்பு அறிக்கை!

#MIvDC

ஒன்ராரியோவை மூன்றாம் அலைக்குள் இழுத்துச் செல்ல டக் போர்டு தான் காரணம் - என்.டி.பியின் தலைவர் ஆண்ட்ரியா ஹோர்வர்த் பரபரப்பு அறிக்கை!

ஃபோர்ட் மூன்றாம் அலையிலிருந்து ஒண்டாரியோவைப் பாதுகாப்பதற்காக மிகக் குறைவான முயற்சியை எடுத்ததோடு, அதனை மிகத் தாமதமாகவும் எடுத்ததன் மூலம் ஒண்டாரியோவை மூன்றாம் அலைக்குள் இழுத்துச் சென்று தத்தளிக்க விட்டுள்ளார். 

உத்தியோக பூர்வமான எதிர்க்கட்சியான என்.டி.பியின் தலைவரான ஆண்ட்ரியா ஹோர்வர்த் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

”கண்களைத் திறந்த நிலையிலேயே டக் ஃபோர்ட் எம்மை இந்த முடக்கல் நிலையில் தள்ளிவிட்டிருக்கின்றார்.  கிருமியின் மாறுபட்ட நிலைகளின் அதி வேகமான வளர்ச்சியையும், பரவலையும் குறித்து வல்லுனர்கள் எச்சரிக்கை செய்து கொண்டிருந்த நிலையிலும் அவர் பொது சுகாதாரப் பாதுகாப்புக்களை ரத்து செய்து எங்களைப் பெரும் ஆபத்திற்குள் வழிநடத்திச் சென்றுள்ளார். 

இந்த நிலை ஒரு போதும் வந்திருக்கக் கூடாது. மூன்றாம் அலையும் இத்தனை கொடுமையானதாக இருந்திருக்கத் தேவையில்லை. 

தத்தம் குடும்பங்களின் ஆரோக்கியத்தை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கும் மக்களையும், ஏற்கெனவே தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் அல்லது ஊதிய இழப்பை எண்ணி வருந்துபவர்களையும் நினைத்து  என் இதயம் பரிதவிக்கின்றது. மேலும், தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களைப் பற்றி நினைத்தும் நான் அளவற்ற கவலையில் உள்ளேன். 

இன்றைய அறிவிப்பில் கூறப்பட்ட விடயங்கள் மிகக் குறைவாக உள்ளன என்பதையும், தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பதையும் மீண்டும் அறிவுறுத்துகின்றேன்.

பொது சுகாதார நடவடிக்கைகள் அவை தொடர்பான வல்லுனர்களின் கோரிக்கைகளை விடக் குறைவாகவே அமுலில் உள்ளன. இதனால் துன்பம் இன்னும் நீடிக்கப் போகின்றது. பழைய தோல்வியுற்ற அணுகுமுறையைப் பின்பற்றியதனால் தான் இன்று இந்த நிலையில் இருக்கின்றோம். 

மேலும் குழப்பமான செய்திகளாகவே வருகின்றன. சிறு வணிகங்களுக்கு நிதி உதவி இல்லை. ஊதியத்துடன் கூடிய சுகயீன நாட்கள் இல்லை. அத்தியாவசியமான பணியிடங்களில் விரிவான சோதனைகள் இல்லை.

பள்ளிச் சிறார்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கு உதவும் பொருட்டு வகுப்புகளில் உச்ச அளவு இல்லை. அத்துடன், அத்தியாவசிய தொழிலாளர்கள் தடுப்பூசியைப் பெறுவதற்கான ஒரு விரிவான திட்டம் இல்லை, அத்துடன் அதற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு நேரமோ கொடுக்கப்படவில்லை. 

ஒண்டாரியர்களுக்கான இந்த அணுகு முறை முன்பும் தோல்வியுற்றது. இந்த முறையும் தோல்வியிலேயே முடியும் என்று நான் அச்சமுறுகின்றேன்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

#MIvDC

சிவகார்த்திகேயன் பட பிரபல நடிகர் திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

  • Thedipaar