Published:Category:

ஆக்சிஜன் சுமந்து செல்லும் பணியில் இந்திய விமானப்படை - ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை எடுத்துச் செல்லும் விமானங்கள்!

#MIvDC

ஆக்சிஜன் சுமந்து செல்லும் பணியில் இந்திய விமானப்படை - ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை எடுத்துச் செல்லும் விமானங்கள்!

கரோனா பரவல் சூழலில் ஆக்சிஜன் கொள்கலன்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை இந்திய விமானப்படை பல்வேறு இடங்களுக்கு விமானம் மூலம் எடுத்து செல்கிறது.

புதிதாக அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்புகளுக்கு எதிரான போரில் களத்தில் குதித்துள்ள இந்திய விமானப்படை, கரோனா மருத்துவமனைகள் மற்றும் மையங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் கொள்கலன்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பல்வேறு இடங்களுக்கு விமானம் மூலம் கொண்டுச் செல்கிறது.

இந்திய விமானப்படை போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. சி-17, சி-130ஜே, ஐஎல்-76, ஏஎன்-32 மற்றும் அவ்ரோ உள்ளிட்ட போக்குவரத்து விமானங்கள் இவற்றில் அடங்கும். சினூக் மற்றும் எம்-17 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொச்சி, மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரில் இருந்து மருத்துவர்களும் செவிலியர்களும் விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

சி-17 மற்றும் ஐஎல்-76 இந்திய விமானப்படை விமானங்கள் மிகப்பெரிய காலி ஆக்சிஜன் டேங்கர்களை, அவை பயன்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து எடுத்துவந்து மிகவும் தேவைப்படும் ஆக்சிஜன் விநியோகத்திற்கான வேகத்தை கூட்டுகின்றன.

மேலும், லே-யில் கரோனா பரிசோதனை மையத்தை அமைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை சி-17 மற்றும் ஐஎல்-76 விமானங்கள் எடுத்துச் சென்றன.

குறுகிய கால அவகாசத்தில் பணியமர்த்துவதற்காக இந்திய விமானப்படையின் போக்குவரத்து மற்றும் ஹெலிகாப்டர் வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

#MIvDC

நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்.

Published:Category:

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

#MIvDC

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்.

Published:Category:

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

#MIvDC

ஆஸ்திரேலியாவில் எலி மழை.

Published:Category:

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

#MIvDC

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனா பாதிப்பால் பலி.

Published:Category:

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

#MIvDC

புயலில் சிக்கிய மீன்பிடி படகு : தமிழக மீனவர்கள் 5 பேர் மாயம்.

Published:Category:

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

#MIvDC

சீனாவின் வூஹான் நகரில் சூறாவளி  : 6 பேர் பலி, 218 பேர் காயம்.  

Published:Category:

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

#MIvDC

கால்வாயில் வேன் கவிழ்ந்து ஏழு குழந்தைகள் உள்பட 11 பலி.

Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

Published:Category:

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

#MIvDC

நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

Published:Category:

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

#MIvDC

இலங்கை பூராகவும் இருக்கின்ற நிலைமை யாழ் மாவட்டத்திலும் காணப்படுகின்றது.

  • Thedipaar