Published:Category:

கனடா மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 : ஈழத்தமிழராக நமது அடையாளத்தை அங்கீகரிப்பது முக்கியம்!

#MIvDC

கனடா மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 : ஈழத்தமிழராக நமது அடையாளத்தை அங்கீகரிப்பது முக்கியம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 என்றால் என்ன?

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மே 2021 இல் நடைபெறும். உங்கள் சமூகம், மாநிலம், ஆட்சிப்பகுதி மற்றும் நாடு முழுவதையும் பற்றிய முடிவுகளை எடுக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து கிடைக்கப்படும் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கனடாவின் மக்கள் தொகை மற்றும், நாம் வாழும் இடங்கள் குறித்த முழுமையான தகவல்களை அறிய ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது.

> மக்கள் தொகை கணக்கெடுப்பு கனடியர்களின் மக்கள்தொகை, சமூக மற்றும் பொருளாதார நிலைமை, அவர்கள் வாழும் குடியிருப்புகள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது.

> இந்த தகவல்கள் கனடியர்களுக்கு உயர்தர புள்ளிவிபரத் தகவல்களை வழங்குகிறது. எனவே, அனைத்து கனடியர்களும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாப்பட்டியலைப் பூர்த்தி செய்வது முக்கியம்.

> மேலும் சில தகவல்கள் அல்லது 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாப்பட்டியலைப் பூர்த்தி செய்வதற்கு census.gc.ca என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

இது பாதுகாப்பானது, விரைவானது மற்றும் எளிதானது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் முக்கியமானது?

> கனடியர்கள், நாட்டின் மாறிவரும் சமூகத்தை துல்லியமாக பார்க்க 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கப்பெறும் தகவல்கள் பயன்படும்.

> இது முக்கியமானது, ஏனெனில் சமூகங்கள், மாநிலம், ஆட்சிப்பகுதி மற்றும் முழு நாட்டையும் பாதிக்கும் முக்கியமான முடிவுகளை எடுக்க அரசாங்கங்கள், வணிகங்கள், சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்துகின்றன.

> மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாப்பட்டியலைப் பூர்த்தி செய்வதன் மூலம், வேலைவாய்ப்பு, பாடசாலைகள், பொது போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளை நிர்ணயிக்கும் சேவைகளைத் திட்டமிடுவதற்குத், தேவையான தகவல்கள் இருப்பதை கனடியர்கள் உறுதி செய்கின்றனர்.

#lamEelamTamil ஏன்?

> தமிழீழத்திலிருந்து ஈழத்தமிழராக நமது அடையாளத்தை அங்கீகரித்து பாதுகாப்பது மிக முக்கியம். இந்த அடையாளத்தை பாதுகாக்க பலர் தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கின்றனர்.

> இது ஒரு தனித்த தேசமாக சுயநிர்ணய உரிமைக்கான நமது உரிமைகளை பயன்படுத்தவும், ஆக்கிரமித்துள்ள இலங்கை படைகளிலிருந்து தமிழீழத்தை விடுவிக்கவும் பெரிதும் உதவும்.

> இலங்கைத் தமிழர் அல்லது சிலோன் தமிழர் என்பது இலங்கையின் ஆக்கரமிப்பாளர்கள் மற்றும் இனப்படுகொலை இலங்கை அரசால் நம்மீது சுமத்தப்பட்ட அடையாளமாகும். நம்மீது சுமத்தப்படும் எதையும் நாம் நிராகரித்து, ஈழத்தின் பூர்வகுடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

> "ஈழத்தமிழ்” (Eelam Tamil) என்பது "ஸ்டாடிஸ்டிக்ஸ் கனடாவின்” (Statistics Canada) சரியான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பதில்! இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், நான் ஒரு ஈழத்தமிழன் என்று அடையாளம் காட்டுகிறேன்.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாப்பட்டியலை எவ்வாறு பூர்த்தி செய்வது?

மே மாதத்தில், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாப்பட்டியலை பூர்த்தி செய்ய உங்கள் வீட்டுக்கு ஒரு கடிதம் வரும். அந்த கடிதத்தில், ஆன்லைனில் வினாப்பட்டியலை முடிக்க உங்களை அனுமதிக்கும் பாதுகாப்பான அணுகல் குறியீட்டைக் காண்பீர்கள்.

ஆன்லைனில் வந்ததும், வினாப்பட்டியலை மூன்று எளிய வழி முறைகளில் முடிக்கலாம். உங்கள் பாதுகாப்பான அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழைந்து, வினாப்பட்டியலை பூர்த்தி செய்து படிவத்தை சமர்பிக்கவும்.

> உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அல்லது காகித பதிப்பு தேவைப்பட்டால், தயவுசெய்து மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி எண்ணை அழைக்கவும்.

> மேலும் சில தகவல்கள் அல்லது 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாப்பட்டியலை பூர்த்தி செய்ய census.gc.ca என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், நான் ஒரு ஈழத்தமிழன் என்று அடையாளம் காட்டுகிறேன்!

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாப்பட்டியலை எவ்வாறு பூர்த்தி செய்வது? 

 


 


 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

#MIvDC

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை!

Published:Category:

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

#MIvDC

மு.க ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை.! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்.!

Published:Category:

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

#MIvDC

அடக்கடவுளே.. பறிபோன ஹீரோ வாய்ப்பு! அஸ்வினுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் வாரிசு நடிகர்! யார்னு பார்த்தீர்களா!!

Published:Category:

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

#MIvDC

கொரோனாவிலும் இலாப வெறி - கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை!

Published:Category:

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

#MIvDC

இந்தியாவில் அடுத்து வரப்போகும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது - அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Published:Category:

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

#MIvDC

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்; உலகையே மிரளவைத்த இளம்பெண்!

Published:Category:

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

#MIvDC

கோவிட் -19 தடுப்பூசி 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த ஹெல்த் கனடா ஒப்புதல்!

Published:Category:

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

#MIvDC

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் போலி COVID-19 சோதனை ஆவணத்துடன் பிடிபட்ட ரொறொன்ரோ நபர்!

Published:Category:

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

#MIvDC

பிரபல ராப் பாடகரான ஈழத்தமிழ் பெண் மாதங்கியின் ஆவணப்படம் கனடாவில் வெளியாகிறது!

Published:Category:

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

#MIvDC

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

  • Thedipaar