Published:Category:

மீன்பிடிக்க சென்ற 86 நாட்டுபடகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: மீன்பிடி சாதனங்கள் பறிமுதல்

#MIvDC

மீன்பிடிக்க சென்ற 86 நாட்டுபடகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: மீன்பிடி சாதனங்கள் பறிமுதல்

மீன்பிடிக்க சென்ற 86 நாட்டுபடகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: மீன்பிடி சாதனங்கள் பறிமுதல்

மீன்பிடிக்க சென்ற 11 நாட்டுப்படகுகளையும் அதில் இருந்த 86 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால்  மீனவர்களிடம் இருந்த மீன்பிடி உபகரணங்களை மட்டும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை 30 மணி நேரத்திற்கு பின் நடுக்கடலில் வைத்து எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

தமிழக அரசு மீன்பிடி தடை காலம் அறிவித்துள்ளதால் மீன் பிடி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் அதிகளவு நாட்டுபடகுகள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மீன் பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்  அடுத்துள்ள தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் இருந்து சுமார் பதினோரு விசைப்படகுகளில் மீன் பிடிப்பதற்காக டாஸ்மன்,பிரவீன்,ராஜ், ராமு,நாகராஜ்,சிம்சன், சுரேஷ், அந்தோணி, கிருஷ்ணன் உள்ளிட்ட் 86 மீனவர்கள்; மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக கடந்த திங்கள் கிழமை மதியம்  நாட்டுப்படகுகளையும் அதில் இருந்து 86 மீனவர்களையும்; சிறைபிடித்து நடுக்கடலில் வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மீனவர்களின்  படகுகளை சோதனை செய்த அந்நாட்டு கடற்படை வீரர்கள்; படகில் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாததால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால்  மீனவர்கள் கைது செய்யாமல்  30 மணி நேரத்திற்கு பின் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

மீனவர்களின் படகுகிள் இருந்த  மீன்பிடி சாதனங்களான, ஜிபிஎஸ், மீன்பிடி  வலைகள், நங்கூரம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மீண்டும் இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்தால் கைது செய்து சிறையில் அடைப்பதாக எச்சரித்தனர்.

திருப்பி அனுப்பட்ட மீனவர்கள் கரைக்கு திரும்பிய பின்  பாம்பன் துறைமுகத்தில் வைத்து  ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர்.

மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது காற்றின் வேகம் காரணமாக இலங்கை எல்லைக்குள் சென்றதாகவும் நடுக்கடலில் எங்களை கைது செய்த அந்நாட்டு கடற்படையினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை  வெட்டி எடுத்துக் கொண்டதாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

#MIvDC

வவுனியா மன்னகுளம் பகுதி தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு.

Published:Category:

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

#MIvDC

வவுனியா நயினாமடு பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல்பொருள் திணைக்களம்.

Published:Category:

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

#MIvDC

பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி.

Published:Category:

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

#MIvDC

யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை

Published:Category:

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

#MIvDC

இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு.

Published:Category:

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

#MIvDC

யாழில் வீடு புகுந்து தாக்குதல்.

Published:Category:

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

#MIvDC

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது. - இஸ்ரேல் பிரதமர்

Published:Category:

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

#MIvDC

பயணத்தடை முடக்கநிலையில் யாசகம் பெற்று வாழும் மக்களுக்கு வவுனியா ஊடகவியலாளர்களினால் மதிய உணவு.

Published:Category:

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

#MIvDC

இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு  

Published:Category:

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

#MIvDC

வவுனியாவில் அனுமதியின்றி வீதியில் சென்ற வாகனங்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைப்பு.

  • Thedipaar