Published:Category:

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

#MIvDC

Listen to news

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது.

நிமலராஜன் கொலை வழக்கு : சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. - சட்ட மா அதிபர் திணைக்களம்

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு பரிந்துரைத்துள்ளது.

அதனால் 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப்  பகுதியாக இருந்த கச்சேரியடிப் பகுதியில் உள்ள அவரது   வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர். அவர் எழுதிக்கொண்டிருந்த கட்டுரையின் மீது சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர்,  அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசி விட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

நிமலராஜன் கொலை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்  பி 423/2000 என்ற வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் நிமலராஜன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேருக்கும் எதிரான குற்றவியல் நடவடிக்கையை தொடர்ந்து முன்னேடுக்க முடியாது என பரிந்துரை வழங்கியுள்ளார்.

அத்துடன், வழக்கின் சந்தேக நபர்களை விடுவித்து 14 நாட்களுக்குள் அறிக்கையிடுமாறும் பொலிஸ் திணைக்களத்தின்
சட்டப் பிரிவு பணிப்பாளருக்கு சட்ட மா அதிபர் பணித்துள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

#MIvDC

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

  • Thedipaar