Published:Category:

கிளிநொச்சியில் கொரோனா சமூக தொற்றில்லை - பரவலை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த களத்தில் அமைச்சர் டக்ளஸ்.

#MIvDC

கொவிட் பரவல் மற்றும் கந்தபுரம் கரும்பு தோட்ட காணி விடயம் உள்ளிட்ட விடயங்களை ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் இதுவரை சமூக தொற்றாக மாற்றமடையவில்லை என்று தெரிவித்துள்ள  மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், சுமார் ஆயிரம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(07.05.2021) இடம்பெற்ற கொரோனா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் கொரோனா தொற்றாளர்களுக்கான வைத்திய வசதிகள் ஏறாபடுத்தப்பட்ட நிலையில், அனைத்து இடங்களிலும் சமகாலத்தில் வைத்திய சேவையை மேற்கொள்வதற்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இது தொடர்பாக சுகாதார திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, போக்குவத்துக்களுக்கான வாகன வசதி போன்ற சில தேவைகள் தொடர்பாகவும் வைத்திய அதிகாரியினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இவைதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்திற்கான தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கிய கோரிக்கையை எழுத்து மூலம் தரும்படி கேட்டுக் கொண்டதுடன் அமைச்சரவையிலும் சுகாதார அமைச்சருடனும் கலந்துரையாடி தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் அரச அதிகாரிகள் அனைவரும் சுய பாதுகாப்புடன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கடற்றொழில் அமைச்சர், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுமாயின் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் தெரிவித்தார்.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் துறைசார் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமானளவு நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அவற்றை காயவிட்டு பதனிடுவதில் காணப்படுகின்ற குறைபாடுகளினால் சரியான சந்தை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதில்  விவசாயிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டியதுடன், அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்தவகையில், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாவட்டத்தில் பல்வேறு பாகங்களில்  சுமார் பத்து நெல் காய வைக்கும் நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், விவசாய நடவடிக்கைகளுக்கு செயற்கை பசளைகளை பயன் படுத்த எமது விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை.

#MIvDC

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை.

Published:Category:

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

#MIvDC

கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் உறவினர்களிடம் கையளிப்பு

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

  • Thedipaar