Published:Category:

ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் இனப்படுகொலை வாரத்திற்கு அங்கீகாரம் - விஜய் தணிகாசலத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து!

#MIvDC

ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் இனப்படுகொலை வாரத்திற்கு அங்கீகாரம் - விஜய் தணிகாசலத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து!

ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் இனப்படுகொலை வாரத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில் ஈடுபட்ட விஜய் தணிகாசலத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ பாராளுமன்றம் ஈழத்தமிழர் இனப்படுகொலையை அங்கீகரித்தது முள்ளிவாய்காலின் 12ஆம் ஆண்டு நினைவு நாட்களில் உலகப்பரப்பில் ஈழத்தமிழர் இனப்படுகொலையை கனடாவின் பாரிய மாநிலமான ஒன்ராரியோ பாராளுமன்றம் மே 6ஆம் நாள் வியாழக்கிழமை 3ஆம் இறுதி வாசிப்பை மேற்கொண்டு விவாதித்து அனைத்துக்கட்சிகளும் ஏகோபித்து வாக்களிக்க தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக அங்கீகரித்து வரலாறு படைத்துள்ளது.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசத்தினால் 2019 இல் தனிநபர் சட்டமூலமாக கொண்டுவரப்பட்ட இச்சட்டமூலம் முதலாம் இரண்டாம் வாக்கெடுப்புகளின் பின் இறுதியும் மூன்றாவதுமான வாசிப்பும் வாக்கெடுப்பிற்கு முன் அது குறித்த பாராளுமன்ற குழுவிற்கு அனுப்பப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரையின் கீழ் அச்சட்டமூலம் மே 6ஆம் நாள் வியாழக்கிழமை மீண்டும் இறுதி வாசிப்பிற்கும் வாக்கெடுப்பிற்குமென எடுத்துக் கொள்ளப்பட்டது. இது குறித்த விவாதத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித்தலைவர் உட்பட தமிழினப்படுகொலை குறித்தும், ஈழத்தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் உரிமை மறுப்புகள் குறித்தும் விரிவாக பேசினர். 

இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவது ஈழத்தமிழ் மக்களுக்கு ஒருவிதத்தில் ஒரு பரிகாரநீதியாக அமையும் என்பதை வலியுறுத்தி தமது ஏகோபித்த ஆதரவை சட்டமூலத்திற்கு அனைவரும் வழங்கினர்.

ராணியின் ஒப்பம் பெறப்பட்டதும் உத்தியோகபூர்வமாக இது சட்டவரைபில் இணைந்துவிடும். இதன்பிரகாரம் மே 18 ஆம் தேதியை முதன்மைப்படுத்திய 7 நாட்கள் ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாகக் கொள்ளப்படும். 

இந்நாட்களில் இனப்படுகொலை குறித்த பல அறிவூட்டல் விடயங்களை முன்னெடுக்கும் பாரிய பொறுப்பு ஒன்ராரியோ வாழ் ஈழத்தமிழ் மக்களுக்கு குறிப்பாகவும், உலகலாவிள தமிழ் மக்களுக்கு பொதுவாகவும் அமைகிறது. 

வடமாகாணசபை, தமிழக சட்டசபை ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானங்களைக் கடந்து வெறும் தீர்மானமாக அமையாமல் ஒரு சட்டவரைவு மூலம் ஒரு சட்டமாக உலகப்பரப்பில் தமிழின இனப்படுகொலை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது, வரலாற்றில் முக்கிய ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது எனலாம். 

இதற்கான முயற்சியில் இறங்கிய ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினர் இளையவர் விஜய் தணிகாசலம் மற்றும் இதற்காக தொடர்ந்தும் தம் பணியாற்றிய அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

#MIvDC

கனேடிய ஆண்களை விட தொடர்ந்து முகக்கவசம் அணிய விரும்பும் கனேடிய பெண்கள்..!

Published:Category:

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

#MIvDC

வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக் கொலை.

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

  • Thedipaar