Published:Category:

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

#MIvDC

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை

போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை ஏற்பட்டுள்ளதா?  துரைராசா ரவிகரன் கேள்வி

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில்அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில் சுகாதார நடைமுறைகளை மீறி சிங்களவர்கள் பௌத்த விழா எடுக்கும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முல்லைத்தீவு போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை ஏற்பட்டுள்ளதா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதுள்ள கொரோனா தொற்று அசாதாரண நிலையினைக் காரணங்காட்டி, முல்லைத்தீவு போலீசார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு நீதிமன்றினூடாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களுக்கு எதிராகத் தடைக்கட்டளைகளைப் பெற்றுள்ளனர்.

அவ்வாறு பெற்றுக்கொண்ட தடைக்கட்டளையினை  நேற்று  முல்லைத்தீவு போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கையளித்திருந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு போலீஸ் பிரிவிற்குட்பட்ட குறுந்தூர் மலையில், கடந்த 10.05.2021 அன்று சிங்கள பௌத்த துறவிகள், தொல்லியல்துறையினர், இராணுவத்தினர் என பலரும் ஒன்றுகூடி, அங்கு பாரிய அளவில் பௌத்த விழா ஒன்றினை சுகாதார நடைமுறைகளை மீறி முன்னெடுத்திருந்தனர்.இதனைக் கண்டுங்காணாதவர்களாக முல்லைத்தீவுப் போலீசார் இருந்தனர்.

ஆனால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ளும்போது, அவர்கள் இந்த நாட்டில் தாம் அக்கறை உடையவர்கள் என காண்பிக்கும் வகையில் இவ்வாறான நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்களைச் செய்கின்றனர்.

எனவே இந்த நினைவேந்தல் விடையத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யும்போது, முல்லைத்தீவுப் போலீசாரிற்கு இருந்த நாட்டின் மீதான அக்கறை, குருந்தூர்மலையில் சுகாதார நடவடிக்கைளை மீறி சிங்கள பௌத்த விழாக்கள் இடம்பெறும்போது அந்தக்கறை ஏன் இல்லாமல்போனது.

முல்லைத்தீவு போலீசார் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்கு இன்னொரு விதமாகவும் செயற்படுகின்றனர் என்பதையே இது உணர்த்துகின்றது - என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

Published:Category:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

#MIvDC

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar