Published:Category:

ஒன்ராறியோவில் தலைதூக்கும் இனவெறி..! சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை மோதச்செய்து தாக்குதல் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

#MIvDC

ஒன்ராறியோவில் தலைதூக்கும் இனவெறி..! சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை மோதச்செய்து தாக்குதல் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

ஒன்ராறியோவில்  சாலையோரம் நடந்து சென்றவர்களை குறிவைத்து காரை மோதச்செய்து நடத்திய தாக்குதலில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

ஒன்ராறியோ மாகாணம் லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் சாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்றுமுன்தினம் இரவு 8.40 மணியளவில் நடந்து சென்றுள்ளனர். சாலையோரம் அந்த குடும்பத்தினர் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த கார் அந்த குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் மேலும் 15 வயதுடைய ஒரு சிறுமி ஆகியோர் அடக்கம். 9 வயது நிரம்பிய சிறுவன் படுகாயமடைந்தான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். 

இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் காரை மோதச்செய்து தாக்குதல் நடத்திய 20 வயது நிரம்பிய நபரை 6 கிலோமீட்டர் தொலைவில் ஒரு வணிக வளாகத்தில் வைத்து கைது செய்தனர்.

இந்த கார் தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மதத்தின் காரணமாகவே வெறுப்புணர்வுடன் அந்த குடும்பத்தினர் மீது வேண்டுமென்றே காரை ஏற்றி தாக்குதல் நடத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.     

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

  • Thedipaar