Published:Category:

வவுனியாவில் 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: சாகயாமாதாபுர தொற்றாளர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு

#MIvDC

வவுனியாவில் 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: சாகயாமாதாபுர தொற்றாளர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு

வவுனியாவில் 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சகாயாமாதாபுரம் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வடைந்துள்ளது.


வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு (09.06) வெளியாகின.


அதில், சகாயாமாதாபுரம் பகுதியில் பதின்மூன்று பேருக்கும், கோயில்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், நெடுங்கேணி மகாஇலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் கடமையாற்றும் குழுமாட்டு சந்திப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கும், ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் இருவருக்கும், குட்செட் வீதியில் ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தாண்டிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சின்னப்புதுக்குளம் ராணி மில் வீதியில் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், புதிய கற்பகபுரம் பகுதியில் கர்ப்பவதியான பெண் ஒருவருக்கும் என 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதேவேளை, ஏற்கனவே வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் 54 கோவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்ட நிலையில் தற்போது மேலும் 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதன் அடிப்படையில் குறித்த கிராம தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வடைந்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

#MIvDC

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

Published:Category:

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

#MIvDC

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

Published:Category:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

#MIvDC

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Published:Category:

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

#MIvDC

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

Published:Category:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

#MIvDC

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

Published:Category:

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

Published:Category:

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

#MIvDC

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

Published:Category:

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar