Published:Category:

கொரோனா பயணத்தடையை மீறி பாண்டிருப்பு பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம்.

#MIvDC

கொரோனா பயணத்தடையை மீறி பாண்டிருப்பு பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம்.

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

எனினும் சிலர் சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் அம்பாறை  மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் பயணக்கட்டுப்பாட்டை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில்  இன்று (9) காலை முதல் மாலை வரை   அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதை காணமுடிகின்றது.

கல்முனை பிராந்தியத்தில் சில  பகுதிகளில் பயணத்தடை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டாலும்  பாண்டிருப்பு  போன்ற  புறநகர் பகுதிகளில் பயணத்தடையினை மீறியை வகையில் சிலர் செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் பயணத்தடைகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும் அதனையும் மீறும் வகையில் சிலரின் செயற்பாடுகள்  அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அம்பாறை  மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி மீன் போன்ற பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட நடமாடும் வியாபாரிகள் ஊடாக விற்பனை செய்யும் நிலையில்  மீன் இறைச்சி விநியோகத்திற்காக அனுமதிகள் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ள  போதிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெறுவதுடன் பயணத்தடையினை  மீறுவோருக்கு எதிராக எந்தவித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாமை தொடர்பில்  பொலிஸ் தரப்பு தகவலின் ஊடாக அறிய முடிகின்றது.

மேலும் பாண்டிருப்பு  பகுதியில் நேற்றும் இன்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு எந்த தேவைகளுக்காகவும் வீதிகளில் வாகனங்களில் பயணித்தல்,  இளைஞர்கள் குழுக்களாக சேர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வீதிகளில் வீணாக சுற்றித் திரிதல்,  மீன் பிடிப்பவர்களைத் தவிர ஏனையோர் கடற்கரைகளில் அனாவசியமாக கூடி இருத்தல்,  அத்தியாவசிய பொருட்களுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதிகமானோர் கூடி இருத்தல், கொரோனா சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வீதிகள் மற்றும் மைதானங்களில் இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுதல் , இசெயற்பாடுகள் தொடர்கதையாகவே உள்ளன என்பதை எமது ஊடக காணோளிகள் சுட்டிக்காட்டுகின்றது.

இதேவேளை இன்று (9) நற்பிட்டிமுனை பகுதியில் எழுமாற்றாக சுகாதார பிரிவினரால் அன்டீஜன் பரிசோதனைகளும் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

Published:Category:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

#MIvDC

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar