Published:Category:

தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!

#MIvDC

தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை அம்சம் தீர்மானமாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலை யூதர்களும், வங்கதேசத்தை இந்தியாவும் உருவாக்கியது போல தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

2021 மே 18ஆம் நாள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (House of Representatives) 117ஆவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில், நிறைவேற்றப்பட்ட 413ஆவது தீர்மானம், ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை விரிவாகப் பட்டியல் இட்டு, உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கின்றது.

மேலும், 2021 ஜனவரி மாதம், ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் மிச்சேல் பேச்சலெட் குறிப்பிட்டபடி, தேசிய மட்டத்தில், பொறுப்புணர்வை முன்னெடுத்துச் செல்ல, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் விருப்பம் இன்மையைக் கருத்தில் கொண்டு, பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பன்னாட்டு அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வேளை இது.

ஆயுதப் போரின் போதும், அதைத் தொடர்ந்தும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, தங்களது அன்புக்கு உரியவர்கள் இருக்கின்ற இடம் குறித்து, இதுவரை எந்தத் தகவலும் இல்லை; போரின் முடிவில், அரசாங்கத்திடம் சரண் அடைந்தவர்கள் குறித்தும், இதுவரை எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை.

எனவே, இந்த அவை (House of Representatives) நிறைவேற்றும் தீர்மானம்:

1. இலங்கையில் ஆயுதப் போர் முடிந்த 12ஆம் ஆண்டு நினைவு நாளில், போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது;

2. இறந்தவர்களின் நினைவை மதித்துப் போற்றுகின்றது; நல்லிணக்கம், மறுவாழ்வு, இழப்பு ஈடு மற்றும் சீர்திருத்தங்களுக்கான தேடலில், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் உறுதுணையாக இருக்க உறுதி பூணுகின்றது;

3. மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்தைப் பாராட்டுகின்றது; இந்த நடவடிக்கைகளில், இலங்கை அரசு தலையிடக் கூடாது.

4. இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நீதிக்காகப் போராடுகின்ற வழக்குரைஞர்கள், அரசாங்க பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டு வருகின்ற, காணாமல் போன தமிழர்களின் குடும்பத்தினரின் துணிச்சலைப் பாராட்டுகின்றது;

5. இலங்கையில் வரலாற்றுக் காலந்தொட்டு ஒடுக்கப்பட்டு வருகின்ற, வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் வாழ்கின் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும்படி, பன்னாட்டு சமூகத்தை வலியுறுத்துகின்றது; இன மோதல்களுக்கு வழிவகுத்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முழுமையான அரசியல் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும்;

7. இலங்கையில் போரின்போது நிகழ்ந்த கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறலுக்கான, நம்பகமான மற்றும் பயனுள்ள, பன்னாட்டுப் பொறிமுறையை நிறுவ, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு, அமெரிக்காவை வலியுறுத்துகின்றது.

இவ்வாறு, அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

#MIvDC

இலங்கைக்கு சீன இராணுவம் வரவில்லை! - சீன தூதரகம்

Published:Category:

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

#MIvDC

கொரோனா வைரஸ் நீங்க வேண்டி விசேட பூஜை வழிபாடு நேற்று யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .

Published:Category:

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

#MIvDC

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு.

Published:Category:

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

#MIvDC

இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை தாங்கிய பேழை ஊர்வலமாக நல்லடக்கம்.

Published:Category:

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

#MIvDC

அதிவேகத்தால் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி.

Published:Category:

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

#MIvDC

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் - மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Published:Category:

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

#MIvDC

‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்த ‘பீஸ்ட்’.

Published:Category:

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

#MIvDC

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 16 பேர் பொது மன்னிப்பில் விடுதலை.

Published:Category:

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

#MIvDC

இந்திய நாட்டின் பெயரை மாற்றுங்கள் : கங்கனா கோரிக்கை!

Published:Category:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

#MIvDC

ஜம்மு காஷ்மீர் பகுதியில் போர் விமானத்தின் முதல் பெண் விமானி நியமனம்.

  • Thedipaar