Published:Category:

இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றம்!

#MIvDC

இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றம்!

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி ஒடுக்குவதற்கே பரவலாகப் பயன்படுகிறது என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுகின்றன. 

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குளும், எதிராக 15 வாக்களும் அளிக்கப்பட்டதுடன், 40 உறுப்பினர்கள் வாக்களிப்பில் இடம்பெறவில்லை. 

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் சிவிலியன் சந்தேக நபர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் கூடிய அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக சித்திரவகைள் இடம்பெறுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும், பலவந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் இது சர்வதேச நியமங்களுக்கு அமைவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்தல், மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட 27 சர்வதேச பிரகடனங்களை அமுல்படுத்தல் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த சலுகை வழங்கப்பட்டது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் வழியாக இந்த சலுகைத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இலங்கைக்கு தற்காலிக அடிப்படையில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் தி;ட்டத்தை இடைநிறுத்தக் கூடிய சாத்தியங்கள் உண்டா என்பதனை உன்னிப்பாக மதிப்பீடு செய்யுமாறும் கோரியுள்ளனர்.

“பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக இலங்கை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சட்டங்கள் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும்“ என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

#MIvDC

அனாவசியமாக 911 அவசர அழைப்பை மேற்கொள்ளும் கனேடிய மக்கள் - காவல்துறை அளித்துள்ள விளக்கம்.!

Published:Category:

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

#MIvDC

ரொறொன்ரோவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு - வெளியான சில முக்கிய விடயங்கள்..!

Published:Category:

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

#MIvDC

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி - வெளிநாடு செல்வோருக்காக தமிழகம் முழுவதும் 75 தடுப்பூசி மையங்கள்..!

Published:Category:

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

#MIvDC

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை..!

Published:Category:

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

#MIvDC

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை - பெற்ற தாயின் வெறிச்செயல்..!

Published:Category:

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

#MIvDC

வேகமெடுக்க இது தான் காரணமா..? தமிழகத்தில் 70% பேருக்கு புதிய டெல்டா கரோனா தொற்று.!

Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

Published:Category:

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

#MIvDC

கொரோனா இறப்பை இனப்படுகொலை எனக் கூறி வீதியில் இறங்கி போராடும் மக்கள்..!

Published:Category:

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

#MIvDC

அயல்நாட்டினர் நிம்மதி பெருமூச்சு - பயணத் தடையில் தளர்வுகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

Published:Category:

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

#MIvDC

ஈரானில் அவசர அவசரமாக மூடப்பட்ட அணுமின் நிலையம் - அந்நாட்டு வரலாற்றில் இதுவே முதல் முறை..!

  • Thedipaar