Published:Category:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

#MIvDC

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட  சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள திம்பிலி குளத்தின் எல்லைக்கு உட்பட்ட மற்றும் பிரதேச செயலக எல்லைக்குட்ப்பட்ட வனவள திணைக்கள எல்லைக்குட்ப்பட்ட சுமார் 30 ஏக்கர் காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள வேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கல்வியலாளர்கள், வைத்தியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், புதுக்குடியிருப்பு நகரப்பகுதியின் பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்டவர்களால் மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த காடழித்து காணி பிடிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

திம்பிலி குளம் புனரமைக்கப்படாத நிலையில் புனரமைப்பதற்கான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்தின் கீழ் இந்த குளம் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் குளத்தினை நம்பி சுமார் 25 ஏக்கர் நெற்செய்கை மேற்கள்ளப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

குளத்தின் ஒருகரை காட்டுப்பகுதியாக காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி காடுகள் அழிக்கப்பட்டு குளத்துக்கு நீர்வரும் ஆறுகள் மூடப்பட்டு காணி அபகரிப்பு இடம்பெற்றுள்ளதோடு குளத்தின் அலை கரையில் அதிகளவிலான சட்டவிரோத மணல் அகழ்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன குளத்தின் அலை கரை பகுதியில் அதிகளவான இடங்களில் பாரிய குழிகள் தோண்டப்பட்டு மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் திம்பிலி குளத்தின் கமக்கார அமைப்புக்களோ ஏனைய மக்களோ வெளியில் செல்லமுடியாத நிலையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் குளத்திற்கு சொந்தமான காணியில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் பிரதேச செயலாளருக்கும் கமக்கார அமைப்பினர் முறையிட்டுள்ளார்கள் இருப்பினும் குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை குறிப்பாக காணி உரிமையாளர்கள் யாரும் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்யவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்கு கனரக இயந்திரம்கொண்டு செல்வதற்கான அனுமதி எதுவும் பெறாத நிலையில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த வசதி படைத்தவர்கள்,அரச உத்தியோகத்தர்களே இந்த காணிபிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.இவ்வாறு தமது அலுவலக ஊழியர்கள் செல்வந்தர்கள் காணி அபகரிப்பு செய்ததன் காரணத்தினால் முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பகுதியில் அமைந்துள்ள வெறும் காணிகளை காணி இல்லாத கர்ணன் குடியிருப்பு மக்களுக்கு தலா அரை ஏக்கர் வீதம் விவசாய பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிப்பதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழுவிற்கு எடுத்து செல்லப்பட்டும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த காணிகள் வேறு நபர்களால் பல ஏக்கர் காணி உள்ளவர்களால் இந்த காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாட்டினை மேற்கொண்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களிடம் கேட்டபோது கடந்த ஒரு மாதகாலமாக அரச காணி அபகரிக்கப்பட்டுள்ளது இதனை அறித்து கிராம சேவையாளர் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்தார் பொலீசார்,வனவளத் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியபோதும் கொரோனா காரணமாக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை இது ஒரு சட்டவிரோதமான செயற்பாடு அரச காணியினை சுத்தம் செய்வதற்கு கனரக இயந்திரங்கள் பாவித்துள்ளதாக கிராம அலுவலகர் முறைப்பாடு செய்துள்ளார் போதிய ஒத்துளைப்ப இல்லாத காரணத்தினால் தடுக்கமுடியவில்லை.

இவர்கள் யார் என நான் அறிந்தவகையில் அரச காணியினை பெறுவதற்கு தகுதியற்றவர்களாக இருக்கின்றார்கள் இது தொடர்பில் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்க பயணத்தடை முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்

குறித்த பகுதியில் கமநல சேவை நிலையம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் வளவள திணைக்களம் ஆகியோருக்கு சொந்தமான காணிகள் காடுகள் இடிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளது சில காணிகளுக்கு வேலிகள் அமைக்கப்பட்டு தென்னை மரங்கள் நாட்டப்பட்டு கிணறு வெட்டப்பட்டு துரித அபிவிருத்தி இடம்பெறுகிறது.

குறித்த காணி உரிமையாளர்கள் இவற்றை தடுக்கவில்லை என்பது அங்கு காணி அபகரித்தவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களுக்கு செல்வந்தர்களும் என்பதால முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏழை மக்கள் காணி அற்றவர்கள் அரை ஏக்கர் காணி வெட்ட அனுமதிக்காதவர்கள் இவற்றை வேடிக்கை பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இடத்துக்கு நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் சென்று நிலைமைகளை பார்வையிட்டு உரிய தரப்புக்களை தொடர்புகொண்டு வினவிய நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் உரிய விசாரணைகளை மேற்க்கொண்டு சடடநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் இயற்க்கை வள சுரண்டல்கள் அழிப்புக்களுக்கு இவ்வாறு ஒவ்வொரு திணைக்களங்களும் மற்ற திணைக்களன்களை சாட்டிவிட்டு செல்கின்ற நிலையில் வசதி படைத்த செல்வந்தர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

#MIvDC

காதலால் வந்த வினை.. சிறுமியை வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

Published:Category:

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

#MIvDC

அபாய பட்டியலில் தமிழகம் - கொரோனா பாதிப்பின் நிலவரம் என்ன..?

Published:Category:

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

#MIvDC

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி

Published:Category:

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

#MIvDC

கடும் நிதி நெருக்கடி ; இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட பாகிஸ்தான் அரசு முடிவு.

Published:Category:

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

#MIvDC

செக் குடியரசில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

Published:Category:

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

#MIvDC

ஜப்பானில்  இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில்  நிலநடுக்கம்.

Published:Category:

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

#MIvDC

மாலியில் பயணிகள் பேருந்து, கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ; 41 பேர் பலி - 33 பேர் படுகாயம்.

Published:Category:

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் குண்டு தாக்குதல். ; 4 பேர் பலி.

Published:Category:

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

#MIvDC

நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு. சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றனர். தவிசாளர்.

Published:Category:

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

#MIvDC

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு.

  • Thedipaar