Published:Category:

எங்கள் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் உறவுகள்

#MIvDC

எங்கள் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் உறவுகள்

தமிழர்களின் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது. அதனை உருவாக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவி தமிழர்களுக்கு தேவை என்று வவுனியாவில் கடந்த 1616 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

முதலில், COVID-19 தடுப்பூசி அனுப்பிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். புதிய டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக பைசர் மற்றும் மொடர்னா இரண்டும் மிகவும் சக்திவாய்ந்தவை என்பதும் 99% செயல்திறன் மிக்கது என்பதும் உலகம் அறிந்ததே.

நம் சொந்த நிலத்தில், குறிப்பாக குழந்தைகளையும், கணவனையும் இழந்த தாய்மார்கள், அன்றாட உணவுக்காக போராடுகிறார்கள் தற்போது, தமிழர்களின் பொருளாதாரம் மேற்கத்திய நாடுகளில் வாழும் உறவினர்களிடமிருந்து வருகின்ற பணமே. இது ஒரு உண்மையான பொருளாதாரம் அல்ல, இந்த பணம் பல சில குடும்பங்களுக்கு மட்டுமே உதவுகிறது.

எங்கள் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது, குறிப்பாக, வேளாண்மை, வணிகம், மீன்பிடித்தல், கட்டமைப்புகள் சிதைவடைந்துள்ளன.

20 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர் எனவே ஒரு பொருளாதாரத்தை உருவாக்க தமிழர்களுக்கு அதிக ஆற்றல் உள்ளது.

சீனர்கள் தங்கள் கடல் அட்டைப்பண்ணையை கிளிநொச்சிக்கு கொண்டு வர முடிந்தால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா  நம் தாயகத்திலும் பல்வேறு பொருளாதார திட்டங்களை முன்னெடுக்கமுடியும்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் பொருளாதார முதலீட்டை நாங்கள் வரவேற்கிறோம். இந்த முதலீடுகள் எங்களுக்கு மிகவும் தேவையானது .

இலங்கை சுதந்திரம் அடைந்து கடந்த 74 ஆண்டுகளாக, தமிழர்களின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கையிலிருந்து எந்த உதவியும் முயற்சியும்  செய்யப்படவில்லை.

அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தமிழர்களின் பொருளாதாரத்திற்கு உதவுமாறு இன்று நாங்கள் கேட்டு கொள்கிறோம். என்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

#MIvDC

அடுத்த 4 ஆண்டுகள் சிறுபாண்மை அரசின் பிரதமராக தொடரப்போகும் ஜஸ்டின் ட்ருடோ..!

Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

  • Thedipaar