Published:Category:

9 ஆண்டுகளாக இலங்கை சிறையில் தவிக்கும் தமிழர்..!

#MIvDC

9 ஆண்டுகளாக இலங்கை சிறையில் தவிக்கும் தமிழர்..!

9 ஆண்டுகளாக இலங்கை சிறையில் தவிக்கும் தமிழர் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் 2 காவல்துறையினரைப் பாதுகாப்பிற்காக அனுப்புவது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மெஹ்ருன்நிஷா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் ரிபாயுதீன் கடந்த 2013ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2016ஆம் ஆண்டு முதல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை இலங்கை சிறையிலிருந்து இந்தியச் சிறைக்கு மாற்றுவது குறித்து இந்தியத் தூதரகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இலங்கை சிறையிலுள்ள எனது கணவரை இந்தியச் சிறைக்கு மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் இலங்கை, கொழும்பிலுள்ள உயர்மட்டக் குழுவிடம் ஆலோசனை செய்து கைதியைத் தமிழ்நாடு சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் 2 காவல்துறையினரைப் பாதுகாப்பிற்காக அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கைதியை இந்தியா கொண்டு வருவதற்குத் தமிழ்நாடு அரசு தரப்பில் 2 காவல்துறையினரைப் பாதுகாப்பிற்காக அனுப்புவது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

Published:Category:

யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு.

#MIvDC

யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு.

Published:Category:

வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளது.

#MIvDC

வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளது.

Published:Category:

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய தூதுவர் பதவியேற்பு.

#MIvDC

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் புதிய தூதுவர் பதவியேற்பு.

  • Thedipaar