Published:Category:

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே சர்வதேச நாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதி : கனடா பிரதமர்

#MIvDC

Listen to news

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே சர்வதேச நாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதி : கனடா பிரதமர்

கனடாவில் இந்த வாரம் கனடா வரவுள்ள 05 மில்லியன் தடுப்பூசிகளுடன் கனடாவிடம் மொத்தம் 66 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும்.

இது 12 வயதுக்கு மேற்பட்ட 33.2 மில்லியன் கனேடியர்களுக்குப் போதுமானது. என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கனேடியர்களுக்கும் போதுமான தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளதால் இனியும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கான எந்தவித காரணங்களும் இல்லை. என செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

தடுப்பூசி பெறத் தகுதியான அனைத்துக் கனேடியர்களுக்கும் புரட்டாதி மாத இறுதிக்குள் முழுமையாகத் தடுப்பூசி போடுவதற்கு கனடிய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

அந்த இலக்கை முழுமையாக அடைவதற்குத் தேவையான தடுப்பூசிகள் எங்களிடம் கையிருப்பில் உள்ளன என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

இதேவேளை, 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கான தடுப்பூசிகளைப் போடுவது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்கள் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு தடுப்பூசி பெறாதோரை இலக்குவைத்து கட்டாய தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் ஏதும் அரசிடம் உள்ளதா? என பிரதமர் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த   பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் செயற்றிட்டங்களை தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகக் கூறினார். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே சர்வதேச நாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar