Published:Category:

கனடா எல்லைகளை அமெரிக்கா தொடர்ந்து மூடி வைத்திருப்பது ஏன்? ஆளுநர்கள் கேள்வி.

#MIvDC

Listen to news

கனடா எல்லைகளை அமெரிக்கா தொடர்ந்து மூடி வைத்திருப்பது ஏன்? ஆளுநர்கள் கேள்வி.

கனேடியர்களுக்காக அமெரிக்கா தொடர்ந்தும் எல்லையை மூடி வைத்திருப்பது ஏன்? என்பது குறித்து ஜோ பைடன் நிர்வாகம் விளக்க வேண்டும் என அமெரிக்காவின் 9 மாகாணங்களின் ஆளுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொது சுகாதாரத் தரவுகள், அறிவியல் ஆலோசனைகள் மற்றும் எங்கள் நிபுணர்களின் ஆலோசனைகள் சரியான நேரத்தில் பொறுப்புடன் எல்லையை மீண்டும் திறக்கும் திட்டத்தை ஆதரிக்கின்றன. என்பதே ஆளுநர்களாகிய எங்களது வலுவான கருத்தாகும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் மற்றும் இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் ஆகியோருக்கு எழுதிய கடித்தில் ஆளுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் மாகாண ஆளுநர்கள் மற்றும் கனேடிய மாகாண அரசாங்கங்களுடன் ஒன்றிணைந்து வெளிப்படையான திட்டங்களை பைடன் நிர்வாகம் வகுக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆவணி 9 முதல் அமெரிக்காவுடனான எல்லை திறக்கப்பட்டு முழு தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று  கனடா பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோ அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.

எனினும் கனடாவின் இந்த அறிவிப்பு வெளியான சில ஓரிரு நாட்களுக்குப் பின்னர் கனடாவுடனான எல்லை மூடல் அறிவிப்பை பைடன் நிர்வாகம் ஆவணி 21 வரை நீடித்தது.

இந்நிலையில் எல்லைப் பகுதி மக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சட்டவாக்க சபையினர் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

தொற்றுநோயை அடுத்து 2020 மார்ச் முதல் அமெரிக்கா - கனடா எல்லைகள் இரு நாடுகளாலும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar