Published:Category:

இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.

#MIvDC

Listen to news

இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.

நாகை துறைமுகத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தவிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து நாகை கடற்கரை பகுதியில் நேற்று முன் தினம் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக சிலர் சுவாமி படங்களை கழுத்தில் மாட்டிக்கொண்டு அதனை விற்பனை செய்வது போல சென்று கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் சுவாமி படங்களை ஆய்வு செய்த போது, அதனுள்ளே 90 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இவர்கள் நாகை பாப்பாகோவில் அந்தணப்பேட்டை ஆழியூர், சிக்கல், புதுப்பள்ளி, விழுந்தமாவடி, கீச்சாங்குப்பம், டி.ஆர்.பட்டினம், காரைக்காலை சேர்ந்த, வீரக்குமார், நிவாஸ், ஜெகபர்சாதிக், தியாகராஜன், சத்தியகீர்த்தி, குமார், முகேஷ், அருண் உள்ளிட்ட 8 பேர் என்பதும் கஞ்சாவை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 8 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை நேற்று நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கஞ்சா கடத்திய குற்றத்திற்காக 8 பேரும் 15 நாள் சிறையில் அடைக்க நாகை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் நேற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

#MIvDC

வவுனியா வடக்கில் இதுவரை 643 நடமாடும் தடுப்பூசி.

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

  • Thedipaar