Published:Category:

மன்னாரில் அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம்.

#MIvDC

மன்னாரில் அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம்.

மன்னாரில் அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று திங்கட்கிழமை (2) காலை 9.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் வலயக்கல்வி பணிமனைக்கு முன் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

இதன் போது 24 வருட ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்க கோரியும், ஆசிரியர்,மாணவர்,பெற்றோர்களை துன் புறுத்துகின்ற கல்வி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வினை வழங்க கோரியும், இலவசக் கல்வியை ராணுவ மயமாகும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் கோரிக்கைகளை முன் வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் மன்னார் வலயக்கல்வி பணிமனை க்கு முன் ஆரம்பமாகி மன்னார் பஜார் வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலக வீதியை சென்றடைந்தது.

அங்கிருந்து  மன்னார் நகர சபை வீதியூடாக மீண்டும் மன்னார் வலயக்கல்வி பணிமனை வீதியை சென்றடைந்தது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதோடு, குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

Published:Category:

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

#MIvDC

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

  • Thedipaar