Published:Category:

சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கு ; நடிகர் தனுஷுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.

#MIvDC

Listen to news

சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கு ; நடிகர் தனுஷுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.

தனுஷ் கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை இறக்குமதி செய்தார்.

இதற்கு நுழைவு வரி விலக்கு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு, நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் தனுஷ் ஏற்கனவே 50 சதவீத நுழைவு வரியை செலுத்திவிட்டதாகவும் பாக்கி வரியை செலுத்த தயாராக இருப்பதாகவும் எனவே வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

தனுஷ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி,  ரூ.50-க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜிஎஸ்டி வரியை கட்டுகிறார்.

பெட்ரோலில் ஜிஎஸ்டி கட்ட முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? எனவும், மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியதுதானே? என்றும் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியதோடு, மனுதாரர் கட்டவேண்டிய பாக்கி வரித்தொகையை கணக்கிட்டு கூறவேண்டும் என தமிழக வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நடிகர் தனுஷ், செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி ரூ.30.30 லட்சம் என வணிகவரித்துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த தொகையை நடிகர் தனுஷ் 48 மணிநேரத்தில் கட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 118 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 118 பேர் உயிரிழப்பு.

Published:Category:

புலிகளைக் கண்டு அஞ்சிய லொஹான் ரத்வத்த துப்பாக்கியை காட்டி மிரட்டுகின்றார் : சரத் பொன்சேகா

#MIvDC

புலிகளைக் கண்டு அஞ்சிய லொஹான் ரத்வத்த துப்பாக்கியை காட்டி மிரட்டுகின்றார் : சரத் பொன்சேகா

Published:Category:

முல்லைத்தீவினை சேர்ந்த அரசியல் கைதி விடுதலை.

#MIvDC

முல்லைத்தீவினை சேர்ந்த அரசியல் கைதி விடுதலை.

Published:Category:

ஆதி லிங்கேஸ்வரரை அழிக்க திட்டம் என மக்கள் தெரிவிப்பு.

#MIvDC

ஆதி லிங்கேஸ்வரரை அழிக்க திட்டம் என மக்கள் தெரிவிப்பு.

Published:Category:

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு விஜயம்.

#MIvDC

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு விஜயம்.

Published:Category:

சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கைது.

#MIvDC

சதொச நிறுவனத்தின் நிதி பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கைது.

Published:Category:

பால்மா வாங்க வந்தவர்களிடம் 6 யோக்கட்டுகளை வாங்குமாறு வற்புறுத்திய வர்த்தகர் கைது.

#MIvDC

பால்மா வாங்க வந்தவர்களிடம் 6 யோக்கட்டுகளை வாங்குமாறு வற்புறுத்திய வர்த்தகர் கைது.

Published:Category:

மகளிர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க அமெரிக்கா கடன்.

#MIvDC

மகளிர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க அமெரிக்கா கடன்.

Published:Category:

சிறிய சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 3 போ் பலி.

#MIvDC

சிறிய சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 3 போ் பலி.

Published:Category:

சீனாவில் கடுமையான நிலநடுக்கம் ; 2 பேர் பலி.

#MIvDC

சீனாவில் கடுமையான நிலநடுக்கம் ; 2 பேர் பலி.

  • Thedipaar