Published:Category:

மில்லியன் கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் "ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்படவிழா 2021" - கோவிட் நெருக்கடியை தாண்டி தமிழர்கள் படைக்கும் சரித்திரம்.!

#MIvDC

மில்லியன் கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் "ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்படவிழா 2021" - கோவிட் நெருக்கடியை தாண்டி தமிழர்கள் படைக்கும் சரித்திரம்.!

"ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்படவிழா 2021" இந்த வருடம் செப்டம்பர் 10 ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் திரைப்படங்கள் திரையிடல், சிறப்பு நிகழ்வுகள், பயிற்சி நிகழ்வுகள் மற்றும் குழு கலந்துரையாடல் இடம்பெற உள்ளது. 3-நாள் நடைபெறும் இந்நிகழ்விற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் பார்வையாளர்களை ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா வரவேற்கிறது.

சுயமாக எடுக்கப்பட்ட சினிமா முதற்கொண்டு, அனைத்து விதமான சினிமா வடிவங்களும் ஆதரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சிறந்த திறமை வாய்ந்தவர்களை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரொறன்ரோ தமிழ் திரைப்பட விழாவின் முக்கிய நோக்கம் புதிய திரைப்படத் தயாரிப்பாளர்களை ஆதரிப்பது, அறிவு மற்றும் தகவல் பரிமாற்றம், கலாச்சாரம் ஆகியவற்றை பிற நாடுகளுக்கு இடையே அவர்களின் சமூக மற்றும் கலாச்சார நெறிமுறைகளுக்கு ஏற்ப ஊக்குவிப்பதாகும். TTIFF ஆனது திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் ஊடாக உலக மக்களிடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.

ரொறன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா (TTFF) இந்தியத் துணைக்கண்டத்திற்கு வெளியே  நடைபெறும் தமிழ் திரைப்படங்களுக்கான மிக முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 500,000 கனேடியர்கள் மற்றும் மில்லியன் கணக்கான ரொறன்ரோ சார்ந்த திரைப்பட ஆர்வலர்களை, TTFF (ரொறன்ரோ தமிழ் திரைப்பட விழா) ஈர்க்க உள்ளது. 


யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்.?

அனைத்து வயதினரும் கலந்துகொள்ள முடியும்.


எப்போது நடைபெறுகிறது.?

தேதி: செப்டம்பர் 10, 2021 வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 12, 2021 வரை

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 2021 | 07:00 PM - 10:00 PM

சனிக்கிழமை, செப்டம்பர் 11, 2021 | 10:00 AM - 10:00 PM

ஞாயிறு, செப்டம்பர் 12, 2021 | 10:00 AM - 10:00 PM


எங்கே நடைபெறுகிறது.?

Woodside Square Cinemas, 1571 Sandhurst Cir, Scarborough, ON, M1V 1V2

சக்கர நாற்காலியை அணுகலாம்

இலவசமாக வாகனம் நிறுத்தலாம்.

பொது போக்குவரத்து மூலம் நிகழ்வு இடம்பெறும் பகுதியை அணுகலாம்.


நுழைவு சீட்டை எவ்வாறு பெறுவது.?

இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். 

கீழ் கண்ட இமெயில் மூலம் பெறலாம். அல்லது பின்வரும் இணையதள இணைப்பிலும் விவரங்கள் அறியலாம்.

Email: info@ttff.ca

https://www.ttff.ca/

https://filmfreeway.com/ttiff



மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar