Published:Category:

மேன்மையுடன் மேலோங்கும் மேதகு - "ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்படவிழாவிற்கு தெரிவாகி சாதனை..!

#MIvDC

மேன்மையுடன் மேலோங்கும் மேதகு - "ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்படவிழாவிற்கு தெரிவாகி சாதனை..!

"ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்படவிழா 2021" இந்த வருடம் செப்டம்பர் 10 ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் திரைப்படங்கள் திரையிடல், சிறப்பு நிகழ்வுகள், பயிற்சி நிகழ்வுகள் மற்றும் குழு கலந்துரையாடல் இடம்பெற உள்ளது. 3-நாள் நடைபெறும் இந்நிகழ்விற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் பார்வையாளர்களை ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா வரவேற்கிறது.

இரண்டாவது வருடமாக நடைபெறும் இவ்விழாவில் பல தமிழ் திரைப்படங்கள் தெரிவாகியுள்ளன. கடந்த வருடம் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான "ஒத்த செருப்பு" திரைப்படம் சிறந்த அங்கீகாரம் பெற்ற நிலையில், இந்த வருடம்  "மேதகு" திரைப்படம் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தில் 90-களில் மதுரையில் நடக்கும் ஒரு தெருக்கூத்து வழியாக மேதகு பிரபாகரனின் வாழ்க்கைச் சொல்லப்படுகிறது. தலைவர் பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவான காரணம்வரை இந்த முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என TNT (Tamil new Tigers) உருவானதற்கான காரணம்வரை படம் வரலாற்றின் பக்கம் நின்று சிற்சில சினிமாத்தனங்களுடன் கதை சொல்கிறது.

தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை பற்றிய முதல் திரைப்பட காட்சி வடிவமாக இது என்றும் நிலைத்திருக்கும். ஒரு ஈழ விடுதலைப் போரின் கதையைச் சொல்ல யாரும் கிஞ்சித்தும் முன்வராத சூழலில், இப்படியானதொரு முயற்சியே பாராட்டுக்குரியதுதான். அதுவும் இதை வெறுமனே முயற்சி என சிறுமைப்படுத்திவிடவும் முடியாத அளவுக்கு, சிறப்பாக எடுத்திருக்கிறார் கிட்டு. 

அவருக்கான சிறந்தொரு அங்கீகாரத்தை "ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்படவிழா 2021"  கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். மென்மேலும் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள். அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் முழுமையான வரலாற்று ஆவணமாக இது மாறும்.

இந்தப்பட்டியலில் மேதகு உட்பட சீயான்கள், மகாமுனி, இயல், சென்னாய் ஆகிய ஐந்து திரைப்படங்கள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar