Published:Category:

3 ஆண்டுகளில் 200 தமிழர்கள் உயிரிழப்பு - வெளிநாடு வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்..!

#MIvDC

3 ஆண்டுகளில் 200 தமிழர்கள் உயிரிழப்பு - வெளிநாடு வேலைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்..!

வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணையரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2016-ம் ஆண்டு முதல் 2019 வரையிலான மூன்று ஆண்டுகளில், வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள் 200 பேரின் உடல்கள் தமிழ்நாட்டுக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2016 - 17ம் ஆண்டில் 48 உடல்களும், 2017 - 18ம் ஆண்டில், 75 உடல்களும், 2018 - 19ம் ஆண்டில் 77 உடல்களும் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை மரணம் மற்றும் தற்கொலை என பல்வேறு காரணங்களுக்காக இந்த இறப்புகள் நிகழ்ந்ததாகவும் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் 2012 முதல் 2019 வரையிலான ஏழு ஆண்டுகளில் மொத்தம் ஆயிரத்து 468 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2014- 15ம் ஆண்டில், வெளிநாடுகளில் இருந்து 428 தமிழர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள், முறையான முகவர்கள் மற்றும் சரியான விசா இல்லாமல் செல்லும்போது பணியிடத்தில் ஏதேனும் இன்னல் ஏற்பட்டால் உரிய உதவியை பெற முடிவதில்லை. தவறான முகவர்களை நம்பி ஏமாறாமல், அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் சமூகத்தை தொடர்புகொண்டு உண்மை நிலவரத்தை கேட்டுக்கொள்ள வேண்டும்.



மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

Published:Category:

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

#MIvDC

அரசியல் கைதிகளின் விடுதலை : தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை -அருட்தந்தை மா.சத்திவேல்

Published:Category:

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

#MIvDC

கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Category:

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

#MIvDC

மன்னாரில் திருட்டு பழி - 14 வயது சிறுவன் தூக்கிட்டு மரணம் - கொலையா? என சந்தேகம்.

Published:Category:

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

#MIvDC

கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட 12 பேருக்கு தொற்று.

Published:Category:

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

#MIvDC

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

Published:Category:

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

#MIvDC

கனடா மீண்டும் ஒரு தோ்தலைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம்..!

Published:Category:

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

#MIvDC

மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான காட்சி..!

  • Thedipaar