Published:Category:

உலகத் தமிழர்களுக்கான மேடை கனடாவில்... ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2021..!

#MIvDC

உலகத் தமிழர்களுக்கான மேடை கனடாவில்... ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2021..!

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் (September 10 - 12, 2021) நடைபெறவுள்ளது. September  10ம் தேதி மாலை 7 மணிக்கு விழா தொடங்கப்பட்டு, september 11, 12 ஆகிய திகதிகளில் முழுமையான திரையிடல் நடைபெறுகிறது..

விழாவில் பங்கேற்ற 250 க்கும் மேற்பட்ட படங்களில், 55 சிறந்த படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.  இதில் 40 வரையான படங்கள் வரும் செப் 11, 12 ஆகிய தினங்கள் Woodside Square  சினிமாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

September 10ம் தேதி மாலை 7 மணிக்கு விழா உத்தியோகப்பூர்வமாக தொடங்கப்படுகிறது.  அதில் ஊடக நண்பர்கள், சமூக அமைப்பினர் மற்றும் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கப்படுகின்றனர். உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. கனடாவில் நடைபெறும் இவ் திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமையும் என்பது உண்மை.

பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை.

நிச்சயமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இக்குறையை நிவர்த்தி செய்யும். தமிழ் திரைப்படங்களையும், அதன் பின்னால் உள்ள கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி, பாராட்டி, மகிழ்ந்து கொண்டாட ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா செப்டம்பர் 10 - 12, 2021 ரொரான்ரோவில் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழர்களுக்கான தனித்துவமான திரை அடையாளமாக, திரைக்களமாக, பல்வேறு வகையான தமிழ்த் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போட்டியிட்டு தகுதியுடையவர்கள் “விருதினையும்,  அங்கீகாரங்களையும்” பெற்றுக்கொள்வார்கள்.

உலகம் முழுவதும் வாழ்கின்ற திரை மற்றும் கலைஞர்களுக்கான மிகப் பெரிய திரையிடல், பயிற்சி, பட தயாரிப்பு உதவிக்களமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா அமையும்.

மேலும் விவரங்களுக்கு 

www.ttff.ca

416-832-7306

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar